டாடா எடுத்த திடீர் முடிவு.. ஏர் இந்தியா பயணிகளே உஷார்..!

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் இலவச லக்கேஜ் அளவைக் குறைத்துள்ளது. விமான போக்குவரத்துத் துறையில் அதிகப்படியான செலவுகள் இருப்பதால் அவ்வப்போது செலவுகளுக்கு ஏற்ப விமான கட்டணத்தை உயர்த்துவது இயல்பு.

ஆனால் தற்போது விமான நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும் என்றும், முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிகளின் பல சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டு உள்ளது.

டாடா எடுத்த திடீர் முடிவு.. ஏர் இந்தியா பயணிகளே உஷார்..!


அரசு நிறுவனமாக இருந்த போது, ரூ.50,000 கோடிக்கும் மேற்பட்ட இழப்பைச் சந்தித்த ஏர் இந்தியாவை லாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என டாடா நிர்வாகம் கூறினாலும், விமான பயணிகளுக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கப்போகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் இதுவரை, எகனாமி கம்ஃபர்ட் மற்றும் கம்ஃபர்ட் பிளஸ் பிரிவுகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 20 கிலோ வரை இலவச லக்கேஜ்-களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது இந்த அளவு 15 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளதாக, பயண முகவர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் மே 4, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

டாடா குழுமம் 2022 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவைக் கையகப்படுத்தியது. தனியார்மயமாக்கலுக்கு முன்னதாக, 25 கிலோ இலவச லக்கேஜ் அளவு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கடந்த ஆண்டு இது 20 கிலோவாக குறைக்கப்பட்டது.

தற்போது, 15 கிலோவாக குறைக்கப்பட்டது மூலம் ஏர் இந்தியா மற்ற விமான நிறுவனங்களின் இலவச லக்கேஜ் அளவிற்கு சமமாக இருக்கிறது. மேலும் இண்டிகோ போன்ற குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் ஒரேயொரு லக்கேஜ் மட்டுமே இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கும் நிலையில், ஏர் இந்தியா பயணிகள் குறிப்பிட்ட எடை வரம்புக்குட்பட்டு பல லக்கேஜ்-களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்குகிறது.

சிவில் விமான போக்குவரத்துத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) விதிமுறைகள் படி, விமான நிறுவனங்கள் குறைந்தது 15 கிலோ இலவச சாமானங்களைப் பயணிகள் கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் ஏர் இந்தியா ப்ரீ லக்கேஜ் அளவை 15 கிலோவாக குறைத்துள்ளது.

'எகனாமி ஃப்ளெக்ஸ்' என்ற உயர் கட்டண பிரிவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 25 கிலோ இலவச லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும், மேலும் டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான கட்டணம் (Change Fee) வசூலிக்கப்படாது போன்ற கூடுதல் வசதிகளையும் ஏர் இந்தியா வழங்குகிறது.

டெல்லி-மும்பை போன்ற வழித்தடங்களில், 'கம்ஃபர்ட் பிளஸ்' மற்றும் 'ஃப்ளெக்ஸ்' கட்டணங்களுக்கு இடையே ரூ.1,000 என்ற சிறிய கட்டண வேறுபாடு இருந்தாலும், 10 கிலோ கூடுதல் இலவச லக்கேஜ் அளவு, கட்டணம் இல்லாத டிக்கெட் மாற்றம் அல்லது ரத்து செய்தல் வசதி, அதிக லாயல்டி புள்ளிகள் மற்றும் சீட் தேர்வு செய்யும் வசதிகள் என கிட்டத்தட்ட ரூ.9,000 மதிப்புள்ள கூடுதல் சேவைகளை ஃப்ளெக்ஸ் கட்டணம் வழங்குகிறது என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

லாபத்தை அதிகரிக்கும் நோக்கில், டாடா குழுமம் கடந்த ஆண்டே பல்வேறு கட்டண பிரிவுகளை அறிமுகப்படுத்தினர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+