இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில், திடீர் விடுமுறை உடன் கேபின் க்ரூ ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டத்தாலும் கடந்த செவ்வாய் இரவு முதல் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 15,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிர்வாகம் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, நிர்வாகத்தின் விதிமுறையை மீறி, நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்ட காரணத்தால் alleged mismanagement எனக் கூறி பணிக்கு வராத 25 விமான கேபின் க்ரூ ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு என்ன பிரச்சனை..? ஏன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்..?
டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் சம்பளக் குறைப்பு செய்யப்பட்டதற்கு எதிராக விமான ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதுதான் ஊழியர்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணமாக இருந்துள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் விமான சேவை நிறுவனங்களில் ஏர் ஏசியா இந்தியா உடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்ததன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா ஊழியர்கள் டாடா குழுமத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
சுமார் 300 விமான ஊழியர்களைக் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.கே. விஜயகுமார் கூறுகையில், இந்த நிறுவன இணைப்புக்கு முன்பு ஊழியர்களின் ஊதியத்தில் அடங்கியிருந்த பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் சில முக்கிய பிரிவு சம்பளம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதால், சம்பளத்தில் கணிசமான அளவிற்கு குறைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இணைப்புக்கு முன்னர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே விமான சேவைகளை இயக்கி வந்தது. அப்போது, விமான ஊழியர்களுக்கு பல்வேறு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
ஆனால், இணைப்புக்குப் பிறகு, உள்நாட்டு இடங்களுக்கும் விமான சேவைகளை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டில் கேபின் க்ரூ ஊழியர்கள் இரவு தங்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள் (layover allowance) போன்றவை வழங்கப்படுவதில்லை.
இதுகுறித்து ஊழியர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதில் அளிக்கப்படாமலும், கேள்வி கேட்பவர்களை அமைதியாக்கி வந்துள்ளனர். இதோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் டெல்லி தொழிலாளர் கமிஷனர் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி புகார் அளித்துள்ளனர்.
ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் திடீர் மாஸ் விடுமுறை அறிவித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகளை இயக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், மே 13ம் தேதி வரை விமான சேவைகளைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது, இது விமான ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவு. பொதுவாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 360 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை இயக்குகிறது.
இந்த விமான ரத்துக்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு அந்த நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.
புதன்கிழமை ஏற்பட்ட பெரும் இடையூறுகளுக்குப் பிறகு, விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் சிங் ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், விமான கேபின் க்ரூ ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாகவும், இடையூறுகளை குறைப்பதற்காக அடுத்த சில நாட்களுக்கு விமான சேவைகளைக் குறைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications