டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயண கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான வாட்ஸ் அப் எண்ணையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது .
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 300 ஊழியர்கள் நேற்று திடீரென ஒரே சமயத்தில் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுமுறை எடுத்தனர்.

தங்களது செல்போன்களையும் இவர்கள் சுவிட்ச் ஆப் செய்து விட்டதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் இவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸுக்கு சொந்தமான 85 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் அவதிக்கு ஆளானார்கள்.
இதனிடையே 30 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
விமானம் ரத்து செய்யப்பட்ட பயணிகளும், மூன்று மணி நேரங்களுக்கு மேலாக தாமதமான விமானங்களில் சென்ற பயணிகளும் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற்அலாம் அல்லது மற்றொரு தேதியில் தங்களது பயணத்தை செட்யூல் செய்து கொள்ளலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக பயணிகள் +91- 6360012345 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத இந்த சூழ்நிலையில் பயணிகள் எதிர்கொண்ட சிரமத்திற்கு வருந்துவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கூறியுள்ளது. இன்றைய தினம் 283 விமானங்களை தங்களது நிறுவனம் இயக்கும் என்றும், தங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஏர் இந்தியாவின் உதவியையும் பெற்று தாங்கள் வழக்கம் போல விமானங்களை இயக்கி வருவதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும் 70க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது, எனவே பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து ஒரு முறை சோதனை செய்து கொள்ள வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரே நேரத்தில் 300க்கும் அதிகமான ஊழியர்கள் விடுமுறை எடுத்ததற்கான காரணம் அவர்களது கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்ட சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications