ஐதராபாத்: இந்தியாவில் விமானங்களில் கோளாறு ஏற்படுவது ,புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்படுவது ,விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது அல்லது பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவது என நாளுக்கு நாள் விமானங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அச்சமூட்டும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.
குறிப்பாக ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளாகி விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர மற்ற அனைவருமே உயிரிழந்தனர். இந்த விபத்தினை தொடர்ந்து விமானங்கள் தொடர்பான அனைத்து செய்திகளுமே மக்களிடம் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த சூழலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸுக்கு சொந்தமான iX110 விமானம் காலை 6.41 மணிக்கு புறப்பட்டது. ஆனால் மீண்டும் 6 57 மணிக்கு இந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திரும்பி தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஐதராபாத்திற்கே திரும்பி வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தின் புகேட் பகுதியை நோக்கி போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் காலை 6:20 மணிக்கு புறப்பட வேண்டியது ஆனால் 20 நிமிடங்கள் தாமதமாகி 6.41 மணிக்கு தான் புறப்பட்டது. இந்த விமானம் காலை 11. 45 மணிக்கு புகேட்டை அடைந்திருக்க வேண்டும். ஆனால் புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே அது மீண்டும் ஐதராபாத்திற்கு திரும்பி வந்து தரையிறங்கி இருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே பயணி ஒருவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்படுகிறது, பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை என தெரிவித்திருக்கிறது.
நேற்று முன் தினம் தான் டெல்லியில் இருந்து இம்பாலை நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது .அதேபோல டெல்லியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கோவாவை நோக்கி புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஒரு எஞ்சின் நடுவானிலேயே திடீரென செயலிழந்து போனது. இதனை அடுத்து அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த மாதம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது .இதில் விமானிகள் விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட 160 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications