நாட்டின் பெரிய மெட்ரோ நகரங்களான பெங்களூரு மற்றும் கொல்கத்தாவை அயோத்தியுடன் இணைக்கும் விமான சேவையை ஜனவரி 17 ஆம் தேதி முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்குகிறது.
அயோத்தியுடன் பிற நகரங்களை இணைக்கும் வகையில் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. அயோத்தி தாம் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதல்முறையாக அயோத்தியில் இருந்து டெல்லிக்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

பெங்களூரு- அயோத்தி தடத்தில் முதல் விமானம் ஜனவரி 17ஆம் தேதி காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அயோத்தியை 10.35 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் அயோத்தியில் இருந்து மதியம் 3.40 மணிக்குக் கிளம்பி பெங்களூரை மாலை 6.10 மணிக்கு சென்றடையும்.
இதேபோல் அயோத்தியில் இருந்து நண்பகல் 11.05 மணிக்குக் கிளம்பி கொல்கத்தாவை மதியம் 12.50 மணிக்கு விமானம் சென்றடையும். மறுமார்க்கத்தில் கொல்கத்தாவில் இருந்து மதியம் 1.25 மணிக்குப் புறப்பட்டு மதியம் 3.10 மணிக்கு வந்தடையும்.
புதிய விமான சேவைகள் தொடங்குவது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை கமர்ஷியல் அதிகாரி
ஆங்குர் கார்க் கூறுகையில், நாடுமுழுவதும் நகரங்களை இணைக்கும் எங்களது குறிக்கோள் திட்டவட்டமாக உள்ளது.
இதற்காக அதிக விமானங்களை பயன்படுத்துகிறோம். அயோத்தி- டெல்லி, அயோத்தி- பெங்களூரு, அயோத்தி- கொல்கத்தா நான் ஸ்டாப் சேவைகளை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு எளிதாக வந்து சேருவர் என்றார்.
வாரம் மூன்று முறை அயோத்தி, பெங்களூரு, கொல்கத்தா விமான சேவைக்கான டிக்கெட்டுகள் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன இணையதளமா airindiaexpress.com இல் கிடைக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைக்கிறது. அண்மையில் வாராணசி- ஷார்ஜா விமான சேவையை அறிமுகப்படுத்தியது.
வாரத்துக்கு 21 முறை இயக்கப்படும் விமானங்கள் மூலம் அயோத்தியை பெங்களூரு, ஷார்ஜாவுடன் இணைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் இருந்து வாரத்துக்கு 60 முறை விமானங்களை டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே ஆகிய இந்திய நகரங்களுக்கும் துபாய்க்கும் இயக்குகிறது.


Click it and Unblock the Notifications