ஏர் இந்தியாவின் விஜயவாடா-ஷார்ஜா புதிய விமானம்.. டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

இந்திய விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

விமான நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளையும் சலுகைகளையும் அவ்வப்போது அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது தனது புதிய சேவையாக விஜயவாடாவில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் இயக்க போவதாக அறிவித்துள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள்

இந்திய விமான நிறுவனங்கள்

இந்தியாவில் பல தனியார் விமான நிறுவனங்கள் உள்ளன என்பதும் அவை வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக டாடாவின் ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் ஆகிய விமான நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் அந்நிறுவனங்கள் சலுகை அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாக புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து ஷார்ஜாவுக்கு பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே விமானங்களை இயக்கி வரும் நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விஜயவாடாவில் இருந்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் ஷார்ஜாவுக்கு சேவையை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான டிக்கெட் விலையும் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயவாடா- ஷார்ஜா

விஜயவாடா- ஷார்ஜா

ஏற்கனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விஜயவாடாவில் இருந்து மஸ்கட் மற்றும் குவைத் ஆகிய அரபு நாடுகளின் பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக விஜயவாடாவுக்கும் தனது சேவையை தொடங்கவுள்ளது.

அக்டோபர் 31 முதல்

அக்டோபர் 31 முதல்

உலகளாவிய விமான சேவையை மேம்படுத்தும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வரும் வியாழன் முதல் அதாவது அக்டோபர் 31 முதல் விஜயவாடாவுக்கு நேரடியாக விமான சேவையை தொடங்கவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் விமானம் அக்டோபர் 31-ஆம் தேதி புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி அலோக் சிங் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'விஜயவாடா மற்றும் ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதல் சர்வதேச சேவையை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான சேவை மிகவும் மந்தமாக இருந்த நிலையில் அந்த கடினமான ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் விமான நிறுவனங்கள் புத்துயிர் பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்து ஒரு மிகப்பெரிய மீட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்' என அலோக் சிங் கூறினார்.

பெருமை

பெருமை

கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்திய நிலைக்கு விமான சேவை திரும்பி உள்ளதால் புதிய சேவைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறோம். அந்த வகையில் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் பகுதிகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஷார்ஜாவுக்கு நேரடி விமானத்தை சரியான நேரத்தில் நாங்கள் இயக்குவதில் பெருமை அடைகிறோம் என்று அலோக் சிங் கூறியுள்ளார்.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் புதிய விமானமான விஜயவாடாவில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்லும் விமான கட்டணம் ரூபாய் 13,669ல் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சார்ஜாவில் இருந்து விஜயவாடாவுக்கு AED 399ல் இருந்து தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-வளைகுடா

இந்தியா-வளைகுடா

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் தற்போது இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்து துறை மிகப்பெரிய மீட்சியை கண்டுள்ளது என்றும் இனி வரும் காலத்தில் வளைகுடா நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிக விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதற்கேற்ப விமான நிறுவனங்களும் தங்களுடைய சேவையை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+