இந்தியாவின் 2வது பெரிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கீழ் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வரும் வேலையில் 2025-26 நிதியாண்டில் வரலாறு காணாத இழப்பை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை தற்போது டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தும் வேளையில் நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.15,000 கோடி வரையிலான இழப்பை பதிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த வரையில் தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், டாடா குழுமத்தின் கைக்கு வந்த பின்பும் இதே நிலை தொடர்கிறது.

15000 கோடி வரையிலான இழப்பு ஏற்பட பல முக்கிய காரணங்கள் உள்ளது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து மூலம் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இதனால் நிதி பாதிப்பு, வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் வான்பரப்பை இந்தியாவுக்கு தடை செய்த காரணத்தால் ஏர் இந்தியாவின் பல வெளிநாட்டு விமானங்கள் மாற்று பாதையில் சென்று வருகிறது. இதனால் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் கூடுதல் செலவாகும் நிலை உள்ளது. தொடர்ந்து 10வது மாதமாக பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கான வான்பரப்பை மூடியுள்ளது.
இவ்விரு சம்பவங்களுக்கு முன்பு முன் நிறுவனம் லாப நிலைக்கு நெருங்கி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேவும் வருடாந்திர இயக்க லாபம் break-even நிலையை அடையும் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது லாபம் அடைய முடியாத நிலைக்கு சென்றது மட்டும் அல்லாமல் 15000 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு நீண்ட பாதையில் பறக்க வேண்டியிருந்தது. இதனால் எரிபொருள் செலவு கணிசமாக உயர்ந்தது. இது ஏர் இந்தியாவின் நிதி நிலையை மேலும் பாதித்தது.
இந்திய விமானப் போக்குவரத்து துறை கடந்த ஆண்டு பல சவால்களை சந்தித்தது. ஏர் இந்தியா விமான விபத்து மூலம் விமான பயணிகள் மத்தியில் அச்சம், சுற்றுசூழல் மற்றும் பருவநிலை காரணமாக விமான தாமதங்கள் மற்றும் ரத்து, இண்டிகோ நிறுவனத்தின் பெருமளவு ரத்துகள், விதிகள் மாற்பம் என பல காரணிகள் மூலம் பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் ஏர் இந்தியாவின் இழப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications