270 உயிர்களை பலி வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ171 விமானம் பறக்க தொடங்கிய சில வினாடிகளில் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்து 240 பேர் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கிய இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பாக விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விமான விபத்து புலனாய்வு அமைப்பு அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் தாக்கல் செய்திருக்கிறது . அந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில் விபத்துக்கான காரணம் என்ன, விமானம் புறப்பட்டது தொடங்கி விபத்து நேர்ந்த வரை விமானிகளுக்கு இடையே நடந்த கலந்தூரையாடல் என்ன என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கியமான அம்சங்களை பார்க்கலாம்.
எத்தனை வினாடிகளில் விபத்து?: இந்த அறிக்கையின் படி விமானம் புறப்பட்டது இந்திய நேரப்படி பகல் 01:08:38 மணி. விமானிகள் மே டே அழைப்பு விடுத்தது 01:09:05 மணி, விமானம் மருத்துவ கல்லூரி கட்டடத்தின் மீது மோதியது 01:09:11 மணி. அதாவது புறப்பட்ட 32 வினாடிகளில் அனைத்தும் நடந்துள்ளது.
நடுவானில் செயலிழந்த என்ஜின்கள்: விமான விபத்து தொடர்பான விசாரணையில் விமானத்தின் இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது திடீரென தடைபட்டு நடுவானில் என்ஜின்கள் செயலிழந்து போயுள்ளன. அதாவது என்ஜின்கள் RUN என்ற நிலையில் இருந்து CUTOFF என்ற நிலைக்கு சென்றுள்ளன. முதல் என்ஜின் நின்று போன அடுத்த வினாடியே இரண்டாவது என்ஜினும் நின்று போயுள்ளது. விமானிகள் துரிதமாக செயல்பட்டு என்ஜின்களை ரீஸ்டார்ட் செய்வதற்கு முயற்சி செய்து இருக்கின்றனர். அப்பொழுது முதல் என்ஜினை பகுதியளவு செயல்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் இரண்டாவது என்ஜினை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை.
விமானிகள் கலந்துரையாடல்: விமானியில் ஒருவர் ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது, நீ செய்தாயா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு மற்றொரு விமானி நான் செய்யவில்லை என கூறுகிறார். எனவே ஒட்டுமொத்த அமைப்பே செயலிழந்து எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது தவறுதலாக சுவிட்சுகள் இயக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிசிடிவி: இரண்டு என்ஜின்களும், செயலிழந்த உடனே விமானத்தில் இருக்கும் எமர்ஜென்சி அமைப்பான Ram Air Turbine ஐ விமானிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது என அந்த அறிக்கை கூறுகிறது .
விமானத்தில் கோளாறா? : விமான இறக்கைகள் பறக்கும் போது என்ன அமைப்பில் வைக்கப்பட வேண்டுமோ அதில் தான் வைக்கப்பட்டிருந்தன அதில் எந்த தவறும் நிகழ்வில்லை. விமானம் புறப்பட்டு மேலே எழுந்த வரை அனைத்து பாகங்களும் முறையாகவே செயல்பட்டிருக்கின்றன.
பறவைகள் மோதியதா?: விமானத்தின் மீது எந்த பறவையும் மோதவில்லை , வானிலை பிரச்சினை இல்லை, எரிபொருளில் கலப்படம் இல்லை, விமானத்தில் தீ விபத்து ஏதும் நேரவில்லை, ஆபத்தான பொருட்கள் எதுவும் விமானத்தில் கொண்டு செல்லப்படவில்லை என விசாரணை அறிக்கை கூறுகிறது. விமானிகளும் உடல் ரீதியான ஃபிட்டாக இருந்தனர் அவர்களுக்கு போதிய பணி அனுபவம் இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications