ஏர் இந்தியா விமான விபத்து.. பதைபதைக்கும் வீடியோ.. என்.சந்திரசேகரன் முக்கிய அறிவிப்பு..!!

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தின் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் ஏர் இந்தியா விமானம் AI 171, 242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது. லண்டன் செல்லவிருந்த இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்படும்போது மேகானி நகர் பகுதிக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்தாக கூறப்படுகிறது. மேலும் டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக உறுதியளித்தார்.

ஏர் இந்தியா விமான விபத்து.. பதைபதைக்கும் வீடியோ.. என்.சந்திரசேகரன் முக்கிய அறிவிப்பு..!!

இந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது. இந்த போயிங் 787-8 விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானியர்கள், 1 கனடியர் மற்றும் 7 போர்ச்சுகீசியர்கள் இருந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு தகவல் வழங்க 1800 5691 444 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் AI 171 விமானம், இங்கிலாந்தின் லண்டன் காட்விக் செல்லவிருந்த நிலையில், பிற்பகல் 1:39 மணியளவில் புறப்படும்போது விபத்துக்குள்ளானது. இந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் மேகானி நகர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து, பெரும் புகை மண்டலத்தை உருவாக்கியது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானப் பயணிகள் பற்றிய தகவல்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் ஏர் இந்தியா தரப்பிலும் உறுதிப்படுத்தியது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர், இதில் 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் அடங்குவர். விமானம் கேப்டன் சுமித் சபர்வால் தலைமையில் இயக்கப்பட்டது, முதல் அதிகாரியாக கிளைவ் குண்டர் பணியாற்றினார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

டாடா சன்ஸ் தலைவரின் இரங்கல்: டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன், இந்த விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். "ஏர் இந்தியா விமானம் AI 171 இன்று விபத்தில் சிக்கியது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்," என அவர் கூறினார். மேலும், அவசர உதவி மையம் செயல்படுத்தப்பட்டு, குடும்பங்களுக்கு உதவி அளிக்க ஏர் இந்தியா முழு முயற்சி எடுப்பதாக உறுதியளித்தார்.

ஏர் இந்தியா, விபத்து நடந்த இடத்தில் அவசர மீட்பு குழுக்களுக்கு உதவி அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான ஆதரவை வழங்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது என்றும் என்.சந்திரசேகரன் தெரிவித்தார். விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் வழங்குவதற்காக ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தவுடன் மேற்கொண்டு அறிவிப்புகள் வெளியிடப்படும் என சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த விமான விபத்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது. விமானப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+