மும்பை: இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் ஏர் இந்தியா விமானத்தின் சேவைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த 12ஆம் தேதி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த ஒருவரை தவிர அனைத்து பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து ஏர் இந்தியா மீது பயணிகளுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்த சூழலில் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

திங்கட்கிழமை அன்று லண்டனின் ஹீட்திரோ விமான நிலையத்திலிருந்து மும்பையை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு திடீரென தலை சுற்றல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டு இருக்கின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திகள் லண்டனிலிருந்து புறப்பட்ட ஏஐ130 விமானத்தில் பயணம் செய்த சுமார் 6 விமான பணியாளர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 11 பேருக்கு தலைசுற்றல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
விமான பயணத்தின் போதே இவர்களுக்கு இந்த உடல் நலக்குறைவு கண்டறியப்பட்டிருக்கிறது. விமானத்தில் உணவு உண்ட பிறகு இது ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே விமானம் தரையிறங்கும் முன்பே இந்த தகவல் மும்பை விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் தயாராக வைக்கப்பட்டிருந்தனர். விமானம் தரையிறங்கிய உடனே மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கினார்.
இதில் இரண்டு பயணிகள் மற்றும் இரண்டு விமான பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிப்பு நீடித்ததால் அவர்கள் விமான நிலையத்திலிருந்து மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவலை வெளியிட்டு இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக டெல்லியில் இருந்து ஜம்முவை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஜிபிஎஸ் சிக்னல் இடையூறு காரணமாக மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து வேறு விமானம் கொண்டுவரப்பட்டு பயணிகள் பத்திரமாக ஜம்முவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட சில பிராந்தியங்களின் மீது பறக்கும் போது இது போல ஜிபிஎஸ் சிக்னல் இடையூறு பிரச்சினையை சந்திப்பதாக தெரிவித்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications