இந்திய விமான போக்குவரத்து துறையில் ஏர் இந்தியாவுக்கும், இண்டிகோ நிறுவனத்திற்கும் பெரும் போட்டி நிலவி வரும் வேளையில், தற்போது இரு நிறுவனங்களும் சேவை விரிவாக்கத்தில் மும்மரமாக இருக்கும் நிலையில் டாடா குழுமத்திற்கு கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா, பைலட்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 9 -15 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை கொடுத்துள்ளது.
இந்த தகவல் ஒட்டுமொத்த விமான போக்குவரத்து துறையை அதிர வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இண்டிகோ நிறுவனம் தற்போது வாரம் ஒரு விமானம் என்ற வகையில் தொடர்ந்து விமானங்களை ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் 12க்கும் அதிகமான பைலட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் இருந்து இண்டிகோ தனது விமான இயக்கத்தில் பணியில் அமர்த்தியது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 70க்கும் அதிகமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சீனியர் அதிகாரிகளை இண்டிகோ தனது நிறுவனத்திற்கு இழுத்துள்ளது.
இதுமட்டுமா வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்களான Emirates, Qatar Airways, Etihad ஆகியவை தனது விமான சேவை விரிவாக்கம் செய்யும் காரணத்தால் அதிகளவில் விமானிகளை ஈத்து வருகிறது. இந்த விமானத்தை இயக்க வளைகுடா நாடுகள் பெரிய விமானங்களை இயக்கும் அனுபவம் கொண்ட இந்திய பைலட்களுக்கு அதிகப்படியான, வரியில்லா சம்பளத்தை கொடுத்து வருகிறது.
இதனால் ஏர் இந்தியா தற்போது பணியில் இருக்கும் பைலட்களை தக்க வைக்கும் பொருட்டு ஒரு மாதத்திற்கு 40 மணிநேரம் விமானத்தை இயக்கும் பைலட்கலுக்கு கொடுக்கப்படும் 6.41 லட்சம் ரூபாய் சம்பளத்தை 7 லட்சமாக அதிகரத்துள்ளது.
இதுவரை 70 மணிநேரம் விமானத்தை இயக்கும் பைலட்களுக்கு தற்போது கொடுக்கப்படும் 7.61 லட்சம் சம்பளத்தை 17 சதவீதம் வரையில் அதிகரித்து 8.9 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதை விட முக்கியமாக ஏர் இந்தியா விமானிங்கள் பட்ஜெட் விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-க்கு மாறினால் one-time transfer allowance ஆக 10-12 லட்சம் தொகையை கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் சுமார் 40 விமானங்களை புதிதாக சேர்க்கப்பட உள்ளதால் இங்கு பைலட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தியாவில் விமான சேவை வேகமாக உயர்ந்தாலும், அதற்கு ஏற்றார் போல் பைலட்கள் இந்தியாவில் இல்லை. மேலும் புதிய பைலட்களை உருவாக்க வேண்டுமாயின் அதிக காலம் தேவைப்படும். 6 மாதம் பயிற்சி, அதன் பின்பு தான் 1500 மணிநேரம் பறக்கும் அனுபவம் போன்றவை இருந்தால் மட்டுமே கேப்டன் என்ற நிலையை அடைய முடியும். அதன் பின்பு தான் பெரிய விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications