ஏர் இந்தியா: 2 கோடி வரை சம்பளம்.. 900 பைலட், 4200 கேபின் க்ரூ ஊழியர்களுக்கு வேலை..!

ஏர் இந்தியாவைக் கைப்பற்றி ஒரு வருடத்திலேயே ஏவியேஷன் துறையில் யாரும் செய்திடாத வகையில் மிகப்பெரிய தொகைக்குச் சுமார் 470 விமானங்களைப் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்தது, இந்த ஒப்பந்தம் பலருக்கும் வியப்பு அளித்தது.

இதைத் தொடர்ந்து ஏர் இந்திய தனது விமான எண்ணிக்கை மற்றும் நெட்வொர்க் விரிவாக்கம் திட்டங்களுக்கு ஏற்ப, ஏர் இந்தியா இந்த ஆண்டு மட்டும் 900 விமானிகள் மற்றும் 4,200 கேபின் க்ரூ துவக்க ஊழியர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் விமானப் பராமரிப்புப் பொறியாளர்களைப் பணியமர்த்தும் பணிகளை வேகப்படுத்த முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா 2023 திட்டம்

ஏர் இந்தியா 2023 திட்டம்

ஏர் இந்தியா 2023 ஆம் ஆண்டு மட்டும் 900 விமானிகள் மற்றும் 4,200 கேபின் க்ரூ துவக்க ஊழியர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 140 விமானங்களை இயக்கும் அளவிற்குத் தான் ஊழியர்கள் உள்ளனர். இந்த நிலையில் விமானம் மற்றும் பயண எண்ணிக்கை அதிகரித்தால் ஊழியர்கள் தட்டுப்பாடு உருவாகும்.

470 விமானங்கள் ஆர்டர்

470 விமானங்கள் ஆர்டர்

இதேவேளையில் ஏர் இந்தியா 470 விமானங்களை ஆர்டர் செய்துள்ளதால் இதற்கு ஏற்றார் போல் பைலட் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்களைப் பணியில் சேர்க்கப்பட உள்ளனர். இதனால் இந்திய விமானத் துறையில் ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

B777 கேப்டன் - 2 கோடி சம்பளம்

B777 கேப்டன் - 2 கோடி சம்பளம்

சமீபத்தில் ஏர் இந்தியா B777 கேப்டன் பைலட்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளதாகவும், இந்தப் பணிக்கு ஏர் இந்தியா மாதம் 21,000 டாலர் வரையில் சம்பளம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மாதம் 21000 டாலர் என்றால் இந்திய ரூபாயில் வருடத்திற்கு 2 கோடி ரூபாய்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

மத்திய அரசிடம் இருக்கும் போது தொடர் நஷ்டத்தில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கும் போதே மீண்டும் மாகராஜா-வாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் தான் கைப்பற்றியது. இதுமட்டும் அல்லாமல் இந்திய விமானப் போக்குவரத்தை முதல் முறையாகத் துவங்கியது டாடா குழுமம் தான், டாடா ஏர்லையன்ஸ் ஆக உருவாகி ஏர் இந்தியாவாக மாறியது.

எமோஷ்னலான விஷயம்

எமோஷ்னலான விஷயம்

இதனால் ஏர் இந்தியா என்பது மிகவும் எமோஷ்னலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனாலேயே டாடா சன்ஸ் சந்திரசேகரன் ஆரம்பம் முதல் ஏர் இந்தியா நிறுவனத்தைப் பிரம்மாண்டமாக மாற்ற அனைத்து விதிமான நடவடிக்கைகளை எடுத்தார்.

 ஏர் இந்தியா நிறுவனம்

ஏர் இந்தியா நிறுவனம்

டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கிய முதல் நாளில் இருந்து இந்நிறுவனம் பெரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர் சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தியது மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த சேவை தளத்தை மறுசீரமைப்புச் செய்து விமானப் பயணிகள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையை அளித்தது, குறிப்பாக வெளிநாட்டு பயணிகளை மத்தியில் நற்பெயரை பெற்றுள்ளது ஏர் இந்தியா.

சிஇஓ காம்ப்பெல் வில்சன்

சிஇஓ காம்ப்பெல் வில்சன்

இதன் பின்பு ஏர் இந்தியா சிஇஓ காம்ப்பெல் வில்சன் தலைமையில் விமானச் சேவை அளிக்கும் இடங்களையும், பயணிகள் எண்ணிக்கையும் மேம்படுத்தவும், இதேநேரத்தில் உள்நாட்டு விமானச் சேவை விரிவாக்கத்தில் தெளிவான ரோடுமே போடப்பட்டது.

470-விமானங்கள் ஆர்டர்

470-விமானங்கள் ஆர்டர்

இதில் டாடா குழுமத்திற்கு நம்பிக்கை கிடைத்த நிலையில் தான் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் 470-விமானங்களை வாங்குவதற்கான ஒரு பெரிய ஆர்டரை செய்தது ஏர் இந்தியா. இந்த ஆர்டரில் 370 விமானங்களைக் கூடுதலாக வாங்க அனுமதி அளித்துள்ளது, இதனால் ஏர் இந்தியா நினைத்தால் 840 விமானங்கள் வரை வாங்க முடியும்.

 36 விமானங்கள் குத்தகை

36 விமானங்கள் குத்தகை

470 விமானங்களுக்கான உறுதியான ஆர்டர்களை ஒரே நேரத்தில் செய்த ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா. கூடுதலாக, டாடா குழும விமான நிறுவனம் ஏற்கனவே 36 விமானங்களைக் குத்தகைக்கு எடுக்கும் பணியில் உள்ளது, அவற்றில் இரண்டு ஏற்கனவே தனது சேவை தளத்தில் சேர்ந்துள்ளன என்று ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+