டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் ஏர் இந்தியா வந்த பின்பு பல முக்கியமான மாற்றங்கள் அடைந்து வரும் வேளையில் அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஏர் இந்தியா, இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டு விமானங்களில் இன்-ஃப்ளைட் வை-ஃபை இணைப்பு வசதியை வழங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.

ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஏர்பஸ் A321neo விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தற்போது தங்கள் பயணத்தின் போது வை-பை சேவையை பயன்படுத்த முடியும். இந்த இலவச சேவை பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை மூலம் இயங்கும் அனைத்து கருவிகளிலும் பயன்படுத்த முடியும்.
நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு பயணிகளுக்கு சர்வதேச தடங்களில் ஏர் இந்தியா இந்த புதிய வைபை வசதிக்கான சோதனை திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட உள்ளது.
இன்-ஃப்ளைட் வை-ஃபை சேவையை பயன்படுத்த, பயணிகள் தங்கள் லேப்டாப், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை பயன்படுத்தி "ஏர் இந்தியா வை-ஃபை" நெட்வொர்க்குடன் எளிதாக இணைக்க முடியும். இணைந்ததும், அவர்கள் தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
ஏர் இந்தியா இந்த சேவையை அனைத்து விமானங்களிலும் விரிவுபடுத்தும் நோக்கில் இருந்தாலும், இன்-ஃப்ளைட் வை-ஃபையின் கிடைக்கும் தன்மை செயற்கைக்கோள் இணைப்பு, ஸ்பெக்ட்ரம் பேண்ட்வித் பயன்பாடு மற்றும் அரசு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து இத்திட்டத்தின் வெற்றி அமையும்.


Click it and Unblock the Notifications