2022ஆம் ஆண்டின் மிகவும் முக்கியமான கைப்பற்றும் திட்டமாகப் பார்க்கப்படும் டாடா குரூப் - ஏர் இந்தியா கைப்பற்றல் வர்த்தகச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிய நாளில் இருந்து தொடர் மாற்றங்கள், அதிரடியான அறிவிப்புகள் என இருந்தாலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர் சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக டாடா குழுமம் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியாவில் தற்போது அனைத்து விதமான விமானச் சேவைகள் இருக்கும் நிலையில் அனைத்தையும் காம்ப்பெல் வில்சன் கீழ் கொண்டு வருவதைக் காட்டிலும் பல தலைவர்கள் நியமிக்கப்படுவதன் மூலம் நிர்வாகம் சிறப்பாக இருக்கும், அந்த வகையில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவின் தலைவராக இருக்கும் அலோக் சிங் இனி ஏர் இந்தியாவின் Low Cost Carrier பிரிவின் தலைவராக இருப்பார் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா LCC
ஏர் இந்தியாவின் Low Cost Carrier பிரிவின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் 100 சதவீத பங்குகளைக் கைப்பற்றப்பட்டு உள்ள ஏர் ஏசியா இந்தியா நிறுவன கட்டமைப்புகள் வர உள்ளது. டாடா குழுமத்தில் இருக்கும் விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா ஆகிய அனைத்தையும் ஏர் இந்தியா உடன் இணைக்கப்பட்ட பின்பு ஏர் இந்தியா Low Cost Carrier தனிப் பிரிவாக நிர்வாகம் செய்யப்பட உள்ளது.
அலோக் சிங்
அலோக் சிங் பணி வருகிற ஜனவரி 1, 2023 முதல் துவங்க உள்ளது, இதேபோல் ஏர் ஏசியா இந்தியா-வின் சிஇஓ Sunil Bhaskaran டாடா குழுமத்தின் புதிய முயற்சியான aviation training academy-யின் தலைவராக இருக்கப் போகிறார் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில் பல வருட போராட்டத்திற்குப் பின்பு மத்திய அரசு ஏர் இந்தியா-வை டாடா குரூப்-க்கு விற்பனை செய்தது. இந்த முடிவு 2021லேயே எடுக்கப்பட்டாலும் 2022 ஜனவரி மாதம் தான் அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்தது.
டாடா குழுமம்
டாடா குழுமம் கைப்பற்றிய உடனே ஏர் இந்தியா உயர்மட்ட அதிகாரத்தில் சில மாற்றத்தையும், வாடிக்கையாளர் சேவையில் பெரும் மாற்றத்தையும் கொண்டு வந்தது. இது இரண்டும் மக்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
புதிய சிஇஓ
இதைத் தொடர்ந்து புதிய சிஇஓ தேடும் பணியில் சில சறுக்கல் இருந்தாலும் பல மாத தேடலுக்குப் பின்பு காம்ப்பெல் வில்சன் மே மாதம் நியமிக்கப்பட்டார். காம்ப்பெல் வில்சன் வந்த பின்பு நிர்வாகப் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஏர் ஏசியா இந்தியா பங்குகளை வாங்கியது, விஸ்தாரா இணைப்புக்குச் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்-யிடம் ஒப்புதல் வாங்கியது போன்றவை.
இணைப்பு
இவருடைய தலைமையில் தற்போது டாடா குழுமத்தில் இருக்கும் விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா ஆகிய அனைத்தையும் ஏர் இந்தியா உடன் இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது டாடா குழுமம்.


Click it and Unblock the Notifications