பயணம் என்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும். ஆனால், சமீபத்திய ரிப்போர்ட்டின் படி, பயணிகளின் லக்கேஜ்களை தவற விடுவதில் "ஏர் இந்தியா" நிறுவனம் முன்னிலை வகிப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதுகுறித்த விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
லக்கேஜ் லாசர்ஸ்.காம் தொகுத்த தரவரிசையின்படி, ஏர் இந்தியா உலக விமான நிறுவனங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பயணிகளின் லக்கேஜ்களை தவறவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெவலப்பர் பீட்டர் லெவல்ஸ் உருவாக்கிய இந்த தரவரிசை பட்டியல் தொலைந்த லக்கேஜ்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

ஸ்பானிஷ் பட்ஜெட் விமான நிறுவனமான "Vueling" அவரது காதலிக்கு சொந்தமான லக்கேஜ்களை இரண்டு வாரங்களுக்கு முன்பு தொலைத்துவிட்டு இதுவரை திருப்பி தரவில்லை என்பதால் லெவல்ஸ் இந்த இணையதளத்தை தொடங்கினார். கடந்த மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனம் 50,001 லக்கேஜ்களை தவறவிட்டுள்ளதாக இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 36 பயணிகளில் ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் தங்கள் லக்கேஜ் கிடைக்கவில்லை என்பதை இது சுட்டி காட்டுகிறது.
ஏர் இந்தியாவை தொடர்ந்து வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ் (West Jet Airlines) மற்றும் ஏர் லிங்கஸ் (Aer Lingus) ஆகியவை இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) கடந்த 30 நாட்களில் 72,594 பைகளை தொலைத்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
லக்கேஜ் லாசர்ஸ்.காம்-ஐ உருவாக்க காரணமான வூலிங், கடந்த 30 நாட்களில் 17,219 பைகளை தொலைத்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. வெப்டைத்ட் ஜூன் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டபோது, வூலிங் எட்டாவது இடத்தில் இருந்தது.
சமூக வலைதளங்களில் தனது கடும் கோபத்தை வெளிப்படுத்திய லெவல்ஸ், "2 வாரங்களுக்கு முன்பு வூலிங் என் காதலியின் சூட்கேஸை தொலைத்து இன்னும் திருப்பி தரவில்லை என்பதால் இதை உருவாக்கினேன். இப்படி ஒரு தளம் முன்பே இருந்திருந்தால், தற்போது மோசமான பயணிகளின் லக்கேஜ்களை தவற விடுவதில் 8-வது இடத்தில் இருக்கும் வூலிங்-ஐ நான் பயணம் செய்ய தேர்ந்தெடுத்து இருக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏர் இந்தியாவைத் தவிர, லக்கேஜ்களைத் தொலைத்த பட்டியலில் அதிக விமான நிறுவனங்களுடன், இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் ஒவ்வொரு 72 லக்கேஜ்களில் 1ஐ தவறவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications