இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் நிலவும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் விரைவில் இஸ்ரேலை தாக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக வளாகம் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் பழிவாங்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் விமானச் சேவை நிறுவனங்கள் ஈரான் வான் பரப்பைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா உட்பட மேற்கத்திய விமான நிறுவனங்களான லுப்தான்சா போன்ற பல தற்போது புதிய வழித்தடங்களைப் பின்பற்றுகின்றன.
இதன் காரணமாக, இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையேயான பயண நேரம் சுமார் ஒரு மணிநேரம் அதிகரித்துள்ளது.
ஈரான் வான் பரப்பைத் தவிர்க்கும் வகையில் டெல்லி-டெல் அவீவ் இடையேயான தனது சனிக்கிழமை விமானத்தை இயக்கியுள்ளது ஏர் இந்தியா. மேலும், வாரத்திற்கு நான்கு முறை இந்த வழித்தடத்தில் சேவையை இயக்குவது குறித்து முக்கிய ஆலோசனையில் இறங்கியுள்ளது ஏர் இந்தியா.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு டெல்லி-டெல் அவீவ் விமான சேவையை நிறுத்தியிருந்த ஏர் இந்தியா, கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு 2024 மார்ச் 3 ஆம் தேதி மீண்டும் இயக்கியது. தற்போது இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் அச்சம் காரணமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்கள் குறித்து ஏர் இந்தியா முடிவு செய்யவுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 161, ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து லண்டன் மீதான மாற்று வழித்தடத்தைப் பின்பற்றியது.
ஐரோப்பாவுக்குச் செல்லும் வழக்கமான இந்தியா-பாகிஸ்தான்-ஈரான்-துருக்கி-கருங்கடல் வழித்தடம் மாற்றாக, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் வடக்கு வழித்தடத்தைப் பின்பற்றியது. ரஷ்யா வான் பரப்பை இன்னும் ஏர் இந்தியா பயன்படுத்துவது கூடுதல் நன்மை.
இந்த வழித்தட மாற்றத்தால் ஏர் இந்தியாவின் ஐரோப்பிய நகரங்களுக்கான பயண நேரம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், விமான எரிபொருள் செலவும் அதிகரிக்கும். பயணிகள் கூடுதல் நேரம் மற்றும் பணத்தை விமானத்தில் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஏர்இந்தியா-வை போல் ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், மும்பைக்குச் செல்லும் தனது வழக்கமான வழித்தடத்தை மாற்றியுள்ளது. முன்பு கருங்கடல்-ஈரான்-பாகிஸ்தான் வழியாக மும்பைக்குச் சென்று வந்த விமானம், தற்போது கிரீஸ்-மத்தியதரைக்கடல்-சவுதி அரேபியா- பாரசீக வளைகுடா-அரபிக்கடல் வழியாகச் சென்று வருகிறது.
உலகளவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் விமான நிறுவனங்களின் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்ட வான்பரப்புகளின் (no fly zones) எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, வான்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆரம்ப புள்ளிவைத்தது ஆப்கானிஸ்தான். தலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வணிக விமானங்கள் ஆப்கானிஸ்தான் வான்பரப்பைத் தவிர்த்து வருகின்றன. இதை தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, பெரும்பாலான மேற்கத்திய விமான நிறுவனங்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யா வான்பரப்புகளை கடந்து செல்வதைத் தவிர்க்கின்றன.
ஈரான் மீதான அமெரிக்காவின் பதற்றம் காரணமாக, அமெரிக்க விமான நிறுவனங்கள் சிறிது காலமாக ஈரான் வான்பரப்பைத் தவிர்த்து வருகின்றன.
More From GoodReturns

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

கத்தார் வாழ் இந்தியர்களே கவனம்!! வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!! #Iranwar



Click it and Unblock the Notifications