வரும் ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்துக்காக கூடுதலாக 6500 விமானிகள் தேவைப்படலாம் என பயணிகள் விமான நிறுவனத் துறை கணித்துள்ளது.
இந்திய அரசுக்கு சொந்தமான முன்னாள் நிறுவனமான ஏர் இந்தியா, கடும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த நிலையில், டாடா குழுமானது கடந்த 2021ம் ஆண்டு வாங்கியது.
டாடா குழுமம் வாங்கிய நிலையில், ஏர் இந்தியாவினை மறுசீரமைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
செயல்பாட்டினை அதிகரிக்க திட்டம்
இந்த நிலையில் தான் ஏர் இந்தியாவின் செயல்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும், விரிவாக்கம் செய்யும் விதமாகவும் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவினை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஆக மொத்தம் ஏர் இந்தியாவுக்கு புதியதாக 470 விமானங்கள் வாங்கப்படவுள்ளன.
6500 பேர் தேவை
இதற்கு முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் 370 விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் மொத்தம் 840 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ள நிலையில், இதனை இயக்க கூடுதலாக 6500 விமானிகள் தேவைப்படுவார்கள் எனலாம்.
தற்போது 113 விமானங்களை இயக்கி வரும், ஏர் இந்தியாவில் 1600 விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
துணை நிறுவனங்களில் என்ன நிலவரம்?
ஏர் இந்தியா எல்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா என இரண்டு துணை நிறுவனங்களில், 54 விமானங்களை இயக்க 850 விமானிகள் உள்ளனர். இதே விஸ்தாராவில் 53 விமானங்களை கொண்டுள்ள நிலையில் 600-க்கும் மேற்பட்ட விமானிகள் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு விமானத்திற்கு எத்தனை பேர்?
தகவல்கள் படி ஒரு போயிங் 777 விமானத்தினை இயக்க 26 விமானிகள் தேவை என்று கூறப்படுகின்றது. ஆக 10 போயிங் விமானங்களை அறிமுகப்படுத்தினாலும் விமானத்திற்கு 260 விமானிகள் தேவைப்படலாம்.
இதே போயிங் 787 எனில் ஒரு விமானத்திற்கு 20 பேர் தேவைப்படுவார்களாம். ஆக 20 போயிங் 787 விமானம் என்றால், அதில் 400 விமானிகள் தேவைப்படுவார்களாம். இது தவிர 10 கமாண்டர்கள் மற்றும் 10 முதல் அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என கூறப்படுகின்றது. இதே 30 அகலமான போயிங் விமானங்களை இயக்குவதற்கு 660 விமானிகள் தேவை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
சராசரியாக ஏர்பஸ் ஏ320 விமானமாக இருந்தாலும் சரி, போயிங் 737 மேக்ஸ் ஆக இருந்தாலும் சரி, 12 விமானங்கள் தேவை. 400 விமானத்திற்கு சராசரியாக 4800 விமானங்கள் தேவை. ஆக மொத்தமாக பார்க்கும்போது ஏர் இந்தியாவில் சுமார் 6500 விமானிகளுக்கான தேவை என்பது இருக்கலாம்.
முக்கிய மைல்கல்
கடந்த 2005ம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க ஆர்டர் அளித்தது. அதன்பிறகு, கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிரது. . ஏர் இந்தியாவின் மிகப்பெரிய விமான ஆர்டர் இதுதான் என்றும் கூறப்படுகின்றது. இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications