இந்தியாவின் மிகபெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் விமானங்களுக்காக ஆர்டர் செய்துள்ளது.
இதன் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என நம்பப்படுகின்றது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரியளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என விமானத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
ஏர் இந்தியாவில் தற்போது 140 விமானங்கள் உள்ள நிலையில், தற்போது 470 விமானங்களை ஏர் இந்தியா வாங்க உள்ளது. இதில் போயிங் மற்றும் ஏர் பஸ் விமானங்கள் அடங்கும்.
ஏர் இந்தியாவின் இந்த விரிவாக்க திட்டம் என்பது அதன் வளர்ச்சி விரிவாக்கத்திற்கு மட்டும் அல்ல, வேலை வாய்ப்பினையும் பெரியளவில் அதிகரிக்கும். இதனை இயக்க பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களும் தேவை என்பதால், விமான துறையில் எதிர்காலத்தில் பற்பல வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளன எனலாம்.
ஏன் அதிகரிக்கலாம்?
இது குறித்து மார்டின் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் மார்டின், விமானத் துறையில் இரண்டு விதமான காரணிகள் மூலம் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கலாம். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை அதிகரிக்கலாம். ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 700 விமானங்கள் வரையில், புதிய விமானம் வாங்க திட்டமிட்டுள்ளது.
பல ஊழியர்கள் தேவை
குறிப்பாக விமானத் துறையில் நேரடியான விமானிகள், கேபின் மெம்பர்கள் மற்றும் டெக்னிக்கல் ஊழியர்கள், மற்ற ஊழியர்கள் என பலரும் அடங்குவார்கள். இது தவிர இந்த விமான பயணத்திற்கு துணைபுரியும் துணை ஊழியர்கள் என பலரும் இதில் அடங்குவர். ஏர் இந்தியாவின் இந்த விரிவாக்க திட்டத்தின் மத்தியில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அனுபவம் வாய்ந்த விமானிகள், மற்ற ஊழியர்கள் என பலரும் தேவை அதிகரித்துள்ளது.
மற்ற துறைகளிலும் வாய்ப்பு
இது விமான துறையை மட்டும் அல்லாது, உள்கட்டமைப்பு துறை, சுற்றுலா துறை மற்றும் பல துறைகளிலும் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். ஆக இதன் மூலமும் வேலை வாய்ப்பானது அந்த துறைகளிலும் அதிகரிக்கலாம். இது இந்தியாவில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் வேலை வாய்ப்பினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
அமெரிக்காவுக்கும் பலன்
முன்னதாக போயிங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தானபோது, டாடா நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடியும் இருந்தார். ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன ஜோ பைடன், இவ்வளவு விமானங்கள் வாங்குவதற்கு இந்தியா கொடுத்திருக்கும் ஒப்பந்தம், அமெரிக்காவிலும் வேலை வாய்ப்பினை தூண்டும் என கூறியிருந்தார்.
இங்கிலாந்தும் நன்றி
இதேபோல உக்ரைன் போரால் மந்த நிலையில் தவித்து வரும் இங்கிலாந்து உள்பட இந்த விஷயத்துக்காக நன்றி கூறியிருக்கின்றன.. இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் இந்த ஒப்பந்தம் குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
விமான துறையில் விரிவாக்கம் செய்யப்படும்போது, அது பெரியளவில் பொருளாதாரத்தினையும் மேம்படுத்தும், வேலை வாய்ப்பினையும் உருவாக்க பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில் இந்திய பொருளாதாரத்தில் இது கணிசமான தாக்கத்தினை இது ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications