மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் ஏர் இந்தியாவை கைப்பற்றிய முதல் நாளில் இருந்து அதிகப்படியான மறுசீரமைப்பு பணிகளை செய்து, வாடிக்கையாளர் சேவை முதல் நிர்வாகம் வரையில் பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா லோகோ, விமானங்களின் டிசைன் என அனைத்தையும் மாற்றியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வண்ணம் டிசைன் செய்யப்பட்டதாக கூறுப்படும் இதேவேளையில் ஏர் இந்தியாவின் சிவப்பு, விஸ்தாராவின் பர்புல் நிறம், புதிதாக தங்க நிறத்தில் வளையம் என பழைமையை தொடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய டிசைன் டிசம்பர் 2023 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பார்க்கலாம், 2026க்குள் அனைத்து விமானங்களும் புதிய டிசைன்-க்கு மாறும். முதல் விமானமாக 70 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வாங்கப்படும் 470 விமானங்களில் ஏர்பஸ் SE A350 ஜெட் விமானங்களில் வர உள்ளது.
இந்த நிலையில் டாடா குழுமம் ஏர் இந்தியா டிவிட்டர் கணக்கில் 2 தரமான வீடியோவை பதவிட்டு உள்ளது.
இதை தொடர்ந்த ஏர் இந்தியாவின் புதிய கேபின் இப்படி இருக்கலாம் என பேடிஎம் தலைவர் மற்றும் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா டிவிட் செய்துள்ளார். இது இர் இந்தியாவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி, இப்புதிய இன்டிரீயர் அடுத்த வருடம் முதல் வர உள்ளது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications