இந்தியாவின் பாரம்பரியமான மற்றும் பழமையான பயணிகள் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா-வை மத்திய அரசிடம் இருந்து வாங்கிய டாடா குழுமம் வர்த்தகம், நிர்வாகம், விமான இயக்கம் என பல பிரிவுகளில் மறுசீரமைப்பு செய்தும் 2023 ஆம் நிதியாண்டில் 15,530 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.
இதற்கிடையில் டாடா குழுமம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர் ஏசியா ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் பணியில் தற்போது தீவிரமாக உள்ளது.
4 நிறுவனங்களின் விமானங்கள், ஊழியர்கள், வர்த்தகம் இணைவதை குறிக்கும் வகையிலும், புதிய பயணத்தை துவங்குவதையும் குறிக்கும் வகையில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியாவின் சிஇஓ கேம்பிள் வில்சன் புதிய ஏர் இந்தியா லோகோ மற்றும் விமான டிசைன்களை வெளியிட்டார். இந்த புதிய டிசைன் முதலில் புதிகாக வாங்கப்படும் Airbus SE A350 ஜெட் விமானங்களில் வர உள்ளது.
ஏர் இந்தியாவின் புதிய லோகோ மற்றும் விமான பெயின்ட் டிசைன்-ஐ FutureBrand டிசைன் செய்துள்ளது. புதிய விமான பெயின்ட் டிசைனில் சிவப்பு, தங்கம், ப்ர்புல் நிறங்களில் டிசைன் செய்யப்பட்டு, விமானத்தின் அடிப்பகுதியில் ஏர் இந்தியா பெயர் மிகவும் பெரியதாக எழுதப்பட்டு தங்க நிறத்தில் பார்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சமுகவலைத்தளத்தில் பலர் ஏர் இந்தியா லோகோ-வை கலாய்த்து வருகின்றனர்.
ஏர்இந்தியா புதிய லோகோவை வெளியிட்டது சரி, ஆனால் ஏர் இந்தியா விமானங்கள் சரியில்லையே, ரீபிராண்ட் செய்ய முடியும் போது, அவர்கள் விமானங்களை புதுப்பிக்காலம். முடிந்தால் மிகவும் பயங்கரமான அனுபவத்திற்காக எனது பணத்தைத் திருப்பித் தரலாம் என கரண் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் புதிய லோகோ-வுக்கு உங்க மதிப்பு 10-க்கு எவ்வளவு?
என்னுடைய மதிப்பு வெறும் 3 தான் என நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா புதிய லோகோ எப்படி இருக்கு.. எனக்கு பிடிக்கவில்லை என ஷிவ்ராம் விஜி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவில் சேவை மேம்பாடு இருக்கும் வரை, இந்தியாவிலிருந்து சர்வதேச நாடுகளுக்கு இடைவிடாத விமானங்கள் இருக்கும் வரை லோகோ வடிவமைப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
புனேவுக்கு சரியான விமான நிலையம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை, சர்வதேச விமானங்களுக்கு மும்பைக்கு மேலேயும் கீழேயும் பயணிப்பதில் எனக்கு பிடிக்கவில்லை என சனில் என்பவர் #ஏர் இந்தியா ஹேஷ்டேக் உடன் டிவிட் செய்துள்ளார்

15000 கோடி இழப்பிற்கு பின்பு ஏர் இந்தியா செய்யும் காரியம் இதுதானா, ரெட், பர்புல், கோல்டு, யாருக்கும் வேண்டாம் இந்த
நிச்சயக்கப்பட்ட திருமணம் என ஷிவம் வஹியா தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா ரீபிராண்டிங், வால் பகுதியில் என்ன செய்திருக்கிறார்கள், சிறுப்பிள்ளைதனமா இருக்கு. MS PAINT-ல் டிசைன் செய்யப்பட்டதா என அப்பூர் கேட்டுல்ளார்.



Click it and Unblock the Notifications