மாணவர்களின் பயண செலவைக் குறைத்து, விமான பயண கட்டணத்தை குறைத்து மலிவாக்கும் நோக்கில், புதிய சிறப்பு சலுகைகளை மகாராஜா என செல்லமாக அழைக்கப்படும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்து டாடா குழுமம் கைப்பற்றியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வரும் வேளையில், தற்போது மாணவர்களுக்கு என பிரத்தியேக சலுகையை வழங்கியுள்ளது.
டாடா குழுமம் வழங்கியுள்ள மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை வெறுமென சலுகையாக பார்க்க முடியாது, இது அடுத்த தலைமுறையினரை வாடிக்கையாளராக மாற்றும் முயற்சி. இந்த புதிய ஆஃப்ரில் ஒவ்வொரு அறிவிப்பும் நீண்ட கால வாடிக்கையாளரையும், இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே இது ஒரு மாஸ்டர்பிளான் ஆகவே பார்க்கப்படுகிறது.

டாடா குழுமம் ஏர் இந்தியா விமான சேவையில் உள்நாடு மற்றும் வெளிநாடு என தங்களது முழு விமான சேவைக்கும் இந்த சலுகைகளை அறிவித்துள்ளது மூலம் இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலத்தில் பயிலும் மாணவர்களுக்கும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த சலுகை பெரிய அளவில் பலன் அளிக்கும்.
அடிப்படை தள்ளுபடி: மாணவர்கள் பதிவு செய்யும் அனைத்து விமான டிக்கெட்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 10% வரையிலான தள்ளுபடி வழங்கும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த தள்ளுபடி எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம், தங்கள் பயண வசதிக்கேற்ப மாணவர்கள் விமான வகுப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.
பேகேஜ் கட்டணம்: மேலும், மாணவர்களுக்கு நிலையாக இலவச பேகேஜ் அளவுக்கு (baggage allowance) மேல், கூடுதலாக 10 கிலோ எடையுள்ள பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் புத்தகங்கள், புராஜெக்ட் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லும் மாணவர்களுக்கு இந்த கூடுதல் இடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பயண தேதி மாற்றும் வசதி: ஏர் இந்தியா அறிவித்துள்ள இப்புதிய சிறப்பு சலுகை திட்டத்தில் மற்றொரு சிறப்பம்சமாக, மாணவர்களுக்கு ஒருமுறை இலவசமாக விமான பயண தேதியை மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறு.
ஏர் இந்தியா வெப்சைட், ஆப்: இதன் மூலம், பயண தேதியில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால், மாணவர்கள் தங்கள் பயண திட்டங்களை கூடுதல் கட்டணம் இல்லாமல் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இருப்பினும், இந்த சலுகை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (airindia.com) மற்றும் மொபைல் ஆப் ஆகியவை வழியாக நேரடியாக பதிவு செய்யும் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய தகுதிகள்: மாணவர் கட்டணங்களுக்கு தகுதி பெற, பயணிகள் சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
உள்நாட்டு விமானங்களுக்கு பயணத்தின் போது அவர்கள் குறைந்தது 12 வயது இருக்க வேண்டும்
வெளிநாட்டு விமானங்களுக்கு 12 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
கூடுதலாக, மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம், கல்வி வாரியம், பல்கலைக்கழகம் அல்லது பள்ளியில் குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாக முழுநேர படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
பதிவு செய்யும் போது, அடையாள அட்டை, சேர்க்கை கடிதம் அல்லது மாணவர் விசா ஆகியவற்றின் மூலம் படிப்பில் சேர்ந்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்பித்து சலுகையை பெறலாம்.
கூடுதல் சலுகை: ஏர் இந்தியாவின் மொபைல் ஆப்-ஐ பயன்படுத்தும் மாணவர்களுக்கு கூடுதல் சலுகை ஒன்று கிடைக்கிறது - விமானப் பதிவுடன் பொதுவாக இணைக்கப்பட்ட வசதி கட்டணங்களை தவிர்க்கலாம். இது உள்நாட்டு விமானங்களில் ₹399 வரையிலும், வெளிநாட்டு விமானங்களில் ₹999 வரையிலும் சேமிக்க முடியும்.
பேமெண்ட் தள்ளுபடி: ஏர் இந்தியாவின் கூட்டணி மூலம் வங்கிகளால் வழங்கப்பட்ட கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்யும் போதும், யூபிஐ வாயிலாக டிக்கெட்-க்கான தொகையை செலுத்தும் போதும் சில தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மூலம் மாணவர்கள் 25 சதவீதம் வரையில் தள்ளுபடியை பெறலாம்.
மகாராஜா கிளப்: மாணவர்கள் மகாராஜா கிளப் மெம்பர்ஷிப் வைத்திருந்தால் டிக்கெட் தொகையில் சுமார் 33 சதவீதம் வரையிலான ரிவார்ட் புள்ளிகளை கூடுதலாக பெறலாம்.


Click it and Unblock the Notifications