இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமாக இருக்கும் ஏர் இந்தியா மிகப்பெரிய விமான சேவை விரிவாக்க பணியில் இருக்கும் இதேவேளையில் தொடர்ந்து லாபகரமானதாக இருக்க வேண்டும் என்பதை டாடா குழுமம் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.
இந்த நிலையில் தான் ஏப்ரல் 17 ஆம் தேதி டாடா குழுமம் தலைமையிலான ஏர் இந்தியா நிர்வாகம் பைலட் மற்றும் கேபின் க்ரூ அதிகாரிகளுக்கான புதிய சம்பள முறையை அறிமுகம் செய்தது. இதை Indian Commercial Pilots Association (ICPA) மற்றும் Indian Pilots Guild (IPG) ஆகிய இரு அமைப்புகளும் மறுப்பு தெரிவித்தது.

இது மட்டும் அல்லாமல் இப்புதிய சம்பள முறை தொழிலாளர் உரிமைக்கு எதிராக உள்ளது என்றும் தெரிவித்தது இந்த அமைப்புகள். இதை நடைமுறைப்படுத்துவதை தடுக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறியது. இந்த நிலையில் தான் 24 மணிநேரத்தில் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தியுள்ளது.
டாடா குழுமம் தலைமையிலான ஏர் இந்தியா தனது விமான சேவையை விரிவாக்கம் செய்ய விமானங்களையும் அதிகரிக்க உள்ளது. அதிகரிக்கப்படும் விமானங்களை இயக்க குறைந்தது 1000 பைலட்களை சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 1000 பைலட்களில் கேப்டன் மற்றும் டிரைனி-யும் அடக்கம்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 1800 பைலட்கள் உள்ளனர், ஆனால் சமீபத்தில் 470 விமானங்களை போயிங் மற்றும் ஏர்பஸ் விமான நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புதிதாக சேர்க்கப்படும் பைலட்கள் அனைவரும் A320, B777, B787 மற்றும் B737 விமானங்களை இயக்க வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதேவேளையில் ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை முதல் டிஜிட்டல் சேவை வரையில் ஏர் இந்தியாவில் மேம்படுத்தி வரும் வேளையில், டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்கு புதிய சீஃப் டெக்னிக்கல் ஆஃபிசர்-ஐ நியமித்துள்ளது.
டாடா குழுமம் - சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்தின் தலைமை இன்ஜினியரிங் பிரிவின் தலைவரான Sisira Kanta Dash அவர்களை தற்போது ஏர் இந்தியாவின் Chief Technical Officer ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஜூன் மாதத்தில் இருந்து ஏர் இந்தியாவில் பணியாற்றுவார்.


Click it and Unblock the Notifications