டெல்லி: பெரும் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், 100% பங்குகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரும் மார்ச் 17ம் தேதிக்குள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தின் படி, ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவிகித பங்குகளையும், கூட்டு நிறுவனமான ஐசாட்ஸில் 50 சதவிகித பங்குகளையும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஆர்வமுள்ளவர்கள் வரும் மார்ச் 17க்குள் விண்ணபிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது அட்டம்ப்டு
மேலும் இவ்வாறு முழுமையாக பங்குகளை வாங்கும் ஏலதாரர்களுக்கு நிர்வாகக் கட்டுப்பாடு மாற்றித் தரப்படும் என்றும் கூறப்படுகிறது. நீண்ட காலமாக மிகப்பெரிய அளவிலான கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக பெருத்த நஷ்டம் கண்டு வருகிறது. ஆக அரசும் ஏர் இந்தியாவை விற்கும் பொருட்டு, எடுக்கும் இரண்டாவது நடவடிக்கை இதுவாகும்.
காலக்கெடு
இதற்காக மற்ற நிறுவனங்கள் தங்களது வெளிப்பாட்டை EoI சமர்பிக்க மார்ச் 17ம் தேதியினை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. ஏசாட்ஸ் என்பது ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும். இது தரை கையாளுதல் சேவைகளை வழங்கி வருகிறது.
துணை நிறுவனங்கள் தனி
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ், ஏர்லைன் அலையட் சர்வீசஸ், ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்றவைகள் ஏர் இந்தியா துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த துணை நிறுவனங்கள் அனைத்தும் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (ஏஐஏஎச்எல்) என்ற தனி நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும். மேலும் தற்போது முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் கீழ், இந்த துணை நிறுவனங்கள் எதுவும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது திட்டம்
ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட காலமாக இழப்பை ஏற்படுத்தி வந்திருந்தது. இந்த நிலையில் தற்போது இழப்பை ஈடு செய்யும் ஒரு பகுதியாக, முதலீடு மீட்புக்கான நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த ஆண்டிலேயே 76% பங்குகளை விற்க எண்ணிய நிலையில், அந்த திட்டம் கைகொடுக்காமல் போகவே, தற்போது இரண்டாவதாக 100% பங்கு விற்பனை என்னும் திட்டத்தினை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications