இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் போர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் விமான பயணத்திற்கான வான்வெளி பயன்பாட்டை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இதனால், ஏர் இந்தியா மத்திய கிழக்கு, ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவிற்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததுள்ளது. ஆனால், லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏழு பயணிகள் உணவு தரத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம், ஏர் இந்தியா பயணிகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏர் இந்தியா சேவை:
அமெரிக்காவின் தலையீடு காரணமாக இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தப்பட்டு உள்ளது, இதன் மூலம் மத்திய கிழக்கு வான்வெளிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "மத்திய கிழக்கு விமான சேவைகள் ஜூன் 25 முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். ஐரோப்பிய விமானங்கள் இன்று முதல் படிப்படியாக மீண்டும் தொடங்குகின்றன, மேலும் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் கனடாவிற்கு விரைவில் சேவைகள் தொடங்கும்," என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஏர் இந்தியாவின் சில விமானங்கள் மறுவழியாக்கம் மற்றும் பயண நேர நீட்டிப்பால் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்றாலும், பயணிகளுக்கு போதுமான சேவைகளையும், வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு ஏர் இந்தியா உறுதிபூண்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஏர் இந்தியா நிர்வாகம் முன்பு பயணிகள், ஊழியர்கள், மற்றும் விமானங்களின் பாதுகாப்பு முதன்மையாக கருதப்படுவதாகவும், ஆபத்தான வான்வெளிகளை தவிர்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்தில் உணவு பிரச்சனை:
ஜூன் 24 அன்று, லண்டனில் இருந்து மும்பைக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI-130-ல், ஐந்து பயணிகள் மற்றும் இரண்டு விமானப் பணியாளர்கள் மயக்கம் மற்றும் குமட்டலால் பாதிக்கப்பட்டனர். இதற்கு ஃபுட் பாய்சன் காரணமாக இருக்கலாம் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தற்போது விசாரணையில் உள்ளது, மேலும் இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மூலம் ஏர் இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications