இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா அதிகக் கடனில் மூழ்கி இருந்த காரணத்தால் ஏலத்தின் மூலம் டாடா சன்ஸ் குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கும் டாடா சன்ஸ் குழுமத்திற்கும் விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் ஏர் இந்தியா டாடா சன்ஸ் நிர்வாகத்தின் கீழ் முழுமையாகச் செல்ல உள்ளது.
இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவிற்கு டாடா சன்ஸ் முக்கியமான உத்தரவிட்டு உள்ளது.
டாடா சன்ஸ்
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் டேலெஸ் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் உடனான போட்டியில் ஏர் இந்தியாவை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை முதல் நாளில் இருந்தே 100 சதவீதம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது டாடா.
ஏர் இந்தியா
இந்நிலையில் ஜனவரி மாத துவக்கத்தில் அல்லது டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் டாடா சன்ஸ் ஏர் இந்தியா-வை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாகக் கைப்பற்ற உள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்களைப் பதவி விலக டாடா சன்ஸ் கடந்த வாரம் உத்தரவிட்டது.
ஏர் இந்தியா நிர்வாகக் கூட்டம்
இதன் மூலம் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஏர் இந்தியா நிர்வாகக் கூட்டத்துடன் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகத் தெரிகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல் படி ஏர் இந்தியாவில் இருக்கும் 7 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது டாடா சன்ஸ்.
7 உயர் அதிகாரிகள்
இதன் படி 4 இயக்குநர்கள், 2 அரசு தரப்பு நாமினி இயக்குநர்கள், சேர்மன், நிர்வாக இயக்குநர்கள் ஆகியோர் வெளியேற உள்ளனர், இதன் மூலம் ஏர் இந்தியா நிர்வாகக் குழு அடுத்த மாத முடிவிற்குள் முழுமையாக டாடா சன்ஸ் கைவசம் வரும். ஏர் இந்தியாவில் கடைசி நிர்வாகக் குழுக் கூட்டம் டிசம்பர் மாதத்தின் 2வது அல்லது 3வது வாரம் நடக்க உள்ளது.
இணைப்பு
இதேவேளையில் டாடா சன்ஸ் தனது ஏர் ஏசியா இந்தியா உடன் ஏர் இந்தியா எஸ்க்பிரஸ் சேவையை இணைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வருகிறது. மேலும் டாடா சன்ஸ் கட்டுப்பாட்டிற்கு வரும் ஏர் இந்தியாவின் பெயர் மாற்ற வேண்டுமா..? கூடாதா..? மக்களாகிய உங்களின் கருத்து என்ன..?
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications