இந்தியாவின் விமானப் போக்குவர்த்து துறையை மாற்றுவது மட்டும் அல்லாமல் இந்தியா உடன் உலக நாடுகளின் இணைப்பை மேம்படுத்தும் முக்கியமான திட்டத்தில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா உள்ளது. நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம் சர்வதேச அளவில் பெரும் உச்சத்தை அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு உள்ளது.
இந்த முக்கியமான பயணத்தில் முதல் கட்டமாக வாடிக்கையாளர் சேவை முதல் நிர்வாக மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. இதன் பின்பு செலவுகளைக் குறைக்கவும், அதேவேளையில் வேகமாக இயங்கவும் டாடா குழுத்தின் கீழ் இருக்கும் அனைத்து விமானச் சேவை நிறுவனங்களையும் ஏர் இந்தியாவுக்குக் கீழ் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா ஆகியவை உள்ளது. இதில் விஸ்தாரா நிறுவனத்தை டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து உருவாக்கியது. தற்போது இணைப்பின் மூலம் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், ஏர் இந்தியாவின் 25.1 சதவீத பங்குகளைக் கைப்பற்றுகிறது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் தென் கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க உள்ளதால், ஒட்டுமொத்த ஏவியேஷன் சந்தையும் டாடா குழுமத்தின் முடிவுகளை உற்று நோக்கி வருகிறது. டாடா குழுமம் 3 நிறுவனங்களை ஏர் இந்தியா உடன் இணைப்பது மூலம் நிர்வாகம் மேம்படும், செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் சேவையைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து புதிய சந்தைகளுக்குச் செல்ல முடியும்.
ஏர்பஸ் மற்றும் போயிங்
இதை அடிப்படையாக வைத்து தான் டாடா குழுமம் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்து சுமார் 470 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதற்கிடையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை காரணமாக இணைப்பு மட்டும் அல்லாமல் கூடுதலாக முதலீடு செய்யவும் தயாராகியுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் படி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனத்தில் 267 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளது. இதோடு விஸ்தாரா நிறுவனத்தின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு இருப்பு ஆகிய இரண்டையும் தேர்ந்து இணைப்பு மற்றும் முதலீட்டுக்கு பின்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீத ஏர் இந்தியா பங்குகளைக் கைப்பற்றியது.
விஸ்தாரா
ஏர் இந்தியா கிளை நிறுவனங்கள் இணைக்கப்பட்டால் விஸ்தாரா விடவும் 4 முதல் 5 மடங்கு பெரிய நிறுவனமாக இருக்கும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த இணைப்புக்கு பின்பு ஏர் இந்தியாவை மல்டி ஹப் அடிப்படையில் இயக்கும் திறன் கொண்டு இருக்கும் இதன் மூலம் சிங்கப்பூரில் தனி ஹப் அமைத்துத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் அதிகப்படியான சேவையை அளிக்க முடியும்.
விஸ்தாரா பிராண்ட் நீக்கம்
மேலும் ஏர் இந்தியா உடன் விஸ்தாரா இணைக்கப்பட்ட உடன் விஸ்தாரா பிராண்ட் மொத்தமாகப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என ஏர் இந்தியா சிஇஓ வில்சன் கூறியுள்ளார். இதேபோலத் தான் ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிராண்டும், இதன் மூலம் டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா என்ற ஒற்றைப் பிராண்ட் பெயருடன் ஒட்டுமொத்த விமானச் சேவையும் இயங்க உள்ளது எனக் கேம்பிள் வில்சன் கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications