இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தனியார் விமான நிறுவனங்கள் புதிய விமான நிலையங்களை இறக்குமதி செய்து பயணிகளை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் 6 ஏர்பஸ் ஏ 320 விமானங்களை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா
டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் 'சீனா டெவலப்மென்ட் பேங்க் ஏவியேஷன்' என்ற நிறுவனத்திடமிருந்து 6 ஏர் பஸ் விமானங்களை குத்தகைக்குப் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டு சேவை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த விமானம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் இந்த விமானங்கள் விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்படும் என்று 'சீனா டெவலப்மென்ட் பேங்க் ஏவியேஷன்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இதுகுறித்து ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் அகர்வால் அவர்கள் கூறிய போது 6 ஏர் பஸ் விமானங்களை வாங்குவதற்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது என்றும் அதிநவீன விமானங்கள் வாயிலாக எங்கள் பயணிகளை நாங்கள் முழு அளவில் திருப்தி செய்ய முடியும் என்றும் அது மட்டுமின்றி சேவையை விரிவுபடுத்த அவ்வப்போது புதிய விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிநவீன விமானங்கள்
ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு படியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற பல ஒப்பந்தங்களில் ஒன்றாக இது இருக்கும் என்றும், ஏனெனில் ஏர் இந்தியா விமான நிறுவனம் அடுத்த சில மாதங்களில் இன்னும் சில அதிநவீன விமானங்களை வாஞக் திட்டமிட்டுள்ளதாகவும் நிபுன் அகர்வால் தெரிவித்தார்.
ஆசியா பசுபிக்
மேலும் எங்கள் நிறுவனம் ஆசியா பசிபிக் முழுவதிலும் அதற்கு மேலும் செல்லும் முயற்சிகளில் உறுதியாக உள்ளது என்றும், எங்கள் தளத்தின் வளங்கள் மற்றும் அளவைப் பயன்படுத்தி கூடுதல் நெட்வொர்க்குகளை வளர்ப்போம்' என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications