இந்தியாவின் முன்னணி பயணிகள் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றியதில் இருந்து பல மாற்றங்களை செய்து வருகிறது.
ஒருபக்கம் சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக போயிங், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து புதிய விமானங்களை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்கும் நிலையில், மறுபுறம் ஏர் இந்தியா தனது பிராண்டுகளையும், சேவைகளையும் ஒன்றிணைக்கும் பணியில் உள்ளது. இதற்கிடையில் தான் ஏர் இந்தியா அகமதாபாத் விமானம் விபத்து இந்நிறுவனத்தின் போக்கை மாற்றியுள்ளது.

ஏர் இந்தியா விமான சேவை பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உணர்த்த பல வகையில் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் முக்கியமான விமான சேவையை நிறுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து வாஷிங்டன்-க்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகளை செப்டம்பர் 1, 2025 முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏர் இந்தியாவின் இந்த முடிவு, அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்கள் தங்களுடைய பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுவோருக்கு தங்களுடைய முடிவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுத்தலாம்.
டெல்லி-வாஷிங்டன் பயணப் பாதை, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்கும் பயணிகளுக்கு முக்கியமான ஒரு வழித்தடமாகும். இந்த சேவை நிறுத்தம், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கும், வணிகம் மற்றும் கல்விக்காக பயணிக்கும் நபர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஏர் இந்தியாவின் இந்த முடிவுக்கு அதன் விமானங்களின் பழுதுபார்ப்பு திட்டம் முக்கிய காரணமாக உள்ளது. இந்நிறுவனம் தனது 26 போயிங் 787-8 விமானங்களை புனரமைப்பு செய்யும் பணியை கடந்த மாதம் தொடங்கியுள்ளது. இந்த விரிவான புனரமைப்பு திட்டம், பயணிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதற்காக திட்டமிடப்பட்டு உள்ளது.
இருப்பினும், இந்தப் பணிகள் 2026 ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல விமானங்கள் ஒரே நேரத்தில் சேவையில் இல்லாமல் போகிறது. இதன் விளைவாக, ஏர் இந்தியாவின் விமான சேவையில் தற்காலிகமாக பற்றாக்குறை ஏற்பட்டு, டெல்லி-வாஷிங்டன் வழித்தடத்தை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விமானப் பாதை வலையமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் நீண்ட தூர விமான சேவைகளுக்கு மற்றொரு முக்கிய சவாலாக, பாகிஸ்தானின் வான்வெளி மூடல் உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் இந்த நடவடிக்கை ஏர் இந்திய விமானங்களை வழக்கத்தை காட்டிலும் நீண்ட தூர பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், விமானப் பயண நேரம் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா தனது விமானப் பாதைகளை மறு ஆய்வு செய்து, செயல்பாட்டு சிக்கல்களைக் குறைக்க முயற்சித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே டெல்லி-வாஷிங்டன் வழித்தடத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏர் இந்தியாவின் புனரமைப்பு திட்டம், பயணிகளுக்கு உயர்ந்த தரமான சேவையை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட விமானங்கள், மேம்பட்ட இருக்கைகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் மேலும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சிகள், நீண்ட கால அடிப்படையில் ஏர் இந்தியாவின் சேவைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் என்று நிறுவனம் நம்புகிறது. இருப்பினும், இந்த மாற்றங்கள் தற்காலிகமாக சில வழித்தடங்களில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், பயணிகளின் நலனை மையமாகக் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications