அகமதாபாத்: டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இந்த விமானத்தில் பயணம் செய்திருந்தார் அவரும் இந்த விபத்தில் இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. அகமதாபாத் அருகில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என டாடா குழுமங்களின் தலைவரான என். சந்திரசேகரன் அறிவித்திருக்கிறார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் முழு மருத்துவ செலவையும் டாடா குடுமமே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக டாடா குழுமம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்க கூடிய பதிவில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து நாங்கள் மிகவும் வேதனை அடைந்திருக்கிறோம், இந்த நேரத்தில் எங்களுடைய துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ஒரு கோடி ரூபாய் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ செலவுகளையும் டாடா குழுமமே இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விபத்தில் சிக்கி சேதம் அடைந்திருக்கும் பிஜே மருத்துவ கல்லூரியின் விடுதியை மீண்டும் கட்டுவதற்கான உதவியை டாடா குழுமம் வழங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என டாடா குழுமம் அந்த பதிவில் தெரிவித்துள்ளது
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications