2022 ஜனவரியில், கடுமையான கடன் சுமை மற்றும் நஷ்டத்தில் இயங்கி வந்த விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியது. டாடா குழுமம் ஏர் இந்தியாவை புதுமைப்படுத்தும் மற்றும் லாப பாதைக்குக்கு திருப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் இயங்கி வந்த அலுவலகங்களை ஒரே இடத்துக்கு கொண்டு வந்தது, புதிய விமானங்களுக்கு ஆர்டர், பணியாளர்களில் பிரிவில் சீரமைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் ஆள் பாதி ஆடை பாதி என்பதை உணர்ந்த தற்போது டாடா குழுமம் ஏர் இந்தியாவின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களின் சீருடையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. நாட்டின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான மணிஷ் மல்ஹோத்ரா, ஏர் இந்தியா விமான குழு பணியாளர்களின் சீருடையை வடிவமைத்துள்ளார்.
இவரது எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா விமான குழுவின் சீருடைகள் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், சட்டென கண்களை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த சில மாதங்களில் புதிய சீருடைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும். முதலில் ஏர் இந்தியாவின் முதல் ஏர்பஸ் ஏ350 விமான சேவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான கேம்ப்பெல் வில்சன், எக்ஸ்-ல் ஏர் இந்தியாவின் பணியாளர்களின் சீருடைகள் விமானப் போக்குவரத்து வரலாற்றில் உலகின் மிக புகழ்பெற்ற ஒன்றாகும்.
மேலும் மணீஷ் மல்ஹோத்ராவின் புதுமையான குழு ஏர் இந்தியாவின் எதிர்கால கதைக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை எழுதும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று பதிவு செய்து இருந்தார். மற்றவர்கள் (போட்டி நிறுவனங்கள்) மத்தியில், பணியாளர்களின் புதிய சீரூடை விமானத்தின் அடையாளத்தின் கருவை சரியாக வெளிப்படுத்துகிறது என்று பதிவு செய்து இருந்தார்.
ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா கூறுகையில், நவீன மற்றும் அதிநவீன தோற்றத்தை உள்ளடக்கிய அதே வேளையில் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் கருவை வெளிப்படுத்தும் சீருடைகளை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது.
இந்தியாவுக்கு அடையாளமாக இருக்கும் சாயல்களை இணைப்பதன் மூலம் இந்த சீருடைகள் குழுவினரை பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விருந்தினர்கள் மீது நீடித்த தாக்கத்தையும் ஏற்படுத்தும், அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்காக அறியப்பட்ட இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்கிறது என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
Introducing our new Pilot & Cabin crew uniforms, an ode to Air India’s rich history and a promise of a bright future.
— Air India (@airindia) December 12, 2023
These uniforms, envisioned by India’s leading couturier @ManishMalhotra, features three quintessential Indian colours – red, aubergine and gold, representing the… pic.twitter.com/Pt1YBdJlMN





More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications