டாடாவின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுடனான முழுமையான இணைப்பிற்கு பின் விஸ்தாரா விமானம் தோஹாவிலிருந்து மும்பைக்கு அதன் முதல் விமான சேவையை துவக்கியது. ஏர் இந்தியா இணைப்புக்குபின், முதல் சர்வதேச விமானமான AI2286 உடன் செயல்படத் தொடங்கியது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.
ஏர் இந்தியா-விஸ்தாரா நிறுவனத்தின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு (திங்கட்கிழமை) புறப்பட்டது. AI2286 என்ற விமான குறியீட்டுடன் இயக்கப்படும் விமானம் தோஹாவில் உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க் கிழமை அதிகாலை மும்பையில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடாவுடன் இணைக்கப்பட்ட முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.

இணைப்புக்கு பின் உள்நாட்டுத் விமானத் துறையில், டாடாவின் முதல் திட்டமிடப்பட்ட விமானம் AI2984 செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. இது ஏ320 என்ற விமானம் மூலம் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்யும் போது பயணிகள் விஸ்தாரா விமானத்தை அடையாளம் காண உதவும் வகையில், இணைப்பிற்குப் பிறகு ஏர் இந்தியாவால் இயக்கப்படும் விஸ்தாரா விமானங்களுக்கு 'AI2XXX' குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
விமான கண்காணிப்பு இணையதளமான Flightradar24.com இன் தகவல்களின்படி, ஏ321 என்ற விமானம் மூலம் இயக்கப்படும் விமானம் தோஹாவிலிருந்து உள்ளூர் நேரப்படி இரவு 10.07 மணியளவில் புறப்பட்டது. இந்த விமான பயண நேரத்திற்கான காலம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும்.
டாடா குழுமத்தின் இரு பகுதியான ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவின் இணைப்பு நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. விஸ்தாரா என்பது டாடாஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியாகும். இணைப்பிற்குப் பிறகு, விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கும்.
புது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் விஸ்தாரா நிறுவனம் டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் துவங்கப்பட்டது. இது கடந்த 2014 முதல் ஒரு தனி பிராண்ட் ஆக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது விஸ்தாரா நிறுவனம் ஏர் டாடாவின் இந்தியாவுடன் இணைந்து அதன் தனி பிராண்ட் அந்தஸ்தை இழக்க இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் முழு விமான சேவைகளின் எண்ணிக்கை ஆனது ஐந்திலிருந்து ஒன்றாக குறையும். இதன் மூலம், டாடா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைனஸ் 25000 கோடி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications