டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் தற்போது காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசு அளவு அபாயகரமான அதிகரித்து இருப்பதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி ,குர்குவான், ஃபரிதாபாத் , நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தர குறியீடு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் இந்த காற்றினை சுவாசித்தால் ஒரு நபர் 49 சிகரெட் களை பிடித்தால் எந்த பாதிப்பு ஏற்படமோ அந்த பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக டெல்லியில் குளிர்காலங்களில் தான் காற்று மாசு மிக மோசமாக இருக்கும் . ஆனால் இந்த வருடம் நவம்பரில் இருந்தே காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வருகிறது என அங்கே வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி மற்றும் சுற்றுபுறங்களில் பனிமூட்டம் போல காணப்படுகிறது, இது காற்று மாசால் ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதிகளில் காற்றுமாசு பிரச்சினை எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை குறிக்கும் வகையிலான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பல்வேறு இடங்களில் கட்டிடங்களே இருப்பது தெரியாத அளவிற்கு காற்று மாசால் ஏற்பட்ட புகை சூழ்ந்திருக்கிறது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது.
இதனிடையே டெல்லி காற்று மாசு பிரச்சினையை குறிப்பிடும் வகையில் தீபக் ஜெயின் என்பவர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பை உங்களால் காண முடிகிறதா? காற்று மாசு என்பது அனைவருக்கும் பொதுவானது என பதிவு செய்துள்ளார் . அவருடைய இந்த வீடியோ ஆயிரக்கணக்கானவர்களின் பார்வைகளையும் பின்னூட்டங்களையும் பெற்றிருக்கிறது.
ஒரு பயனர் இந்த 100 கோடி ரூபாய் அடுக்குமாடி குடியிருப்புக்கு உரிமையாளராக இருப்பவர் துபாய் அல்லது கோவாவிற்கு இடம்பெயர்ந்து விட்டார். ஏழை எளிய மக்கள் தான் தற்போது இந்த விஷத்தை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மக்கள் எப்பொழுதுதான் சுத்தமான காற்று வேண்டும் அதற்கு நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என எண்ணுவார்களோ என ஒரு பயனர் கவலை தெரிவித்துள்ளார்.
ஒரு பயனர் இயற்கைக்கு ஏழை பணக்காரன் என்பதெல்லாம் தெரியாது என பதிவு செய்துள்ளார். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் டெல்லியில் இருக்கும் 38 காற்று தர கண்காணிப்பு மையங்களில் 21 இடங்களில் காற்றின் தர குறியீடு 490 மற்றும் அதற்கு மேல் இருக்கிறது என தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை அன்று காலை 7 மணி அளவில் டெல்லியில் காற்றின் தர குறியீடு 492 என்ற அளவில் இருக்கிறது. இது மிக மோசமான ஒரு குறியீடாகும். ஆனந்த் விஹார், சோனியா விகார் உள்ளிட்ட பகுதிகளில் 500ஐ கடந்துள்ளதாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications