விமான பயணத்தைப் பொறுத்தவரையில் ஒரு சில விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் உள்நாட்டில் பயணம் செய்தாலும் சரி.. வெளிநாட்டில் பயணம் செய்தாலும் சரி எடுத்துச் செல்லக்கூடிய பணம் மற்றும் நீங்கள் கொண்டு வரும் சாமான்களுக்கு சில முக்கிய விதிகள் உள்ளன. மற்ற போக்குவரத்து முறைகளை விட விமான பயணம் விரைவாக பயணம் செய்வதற்கு உதவுகிறது. ஆனால் விமான பயணம் மேற்கொள்ளும் போது லக்கேஜ் எடை வரம்புகள் மற்றும் பண விதிமுறைகளுக்கு உட்படுவதை உறுதி செய்து கொள்வது அவசியம். இந்தப் பதிவில் அது குறித்து விவரங்களைப் பார்ப்போம்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும்போது எவ்வளவு பணத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்?:

உள்நாட்டு பயணத்திற்கான பண வரம்புகள்: உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு விதிகள் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் படி உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரையிலான ரொக்க பணத்தை எடுத்துச் செல்லலாம். ஆனால் இந்த விதி சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும்போது பொருந்தாது.
சர்வதேச பயணத்திற்கான பணவரம்புகள்: நீங்கள் எந்த வெளிநாட்டிற்கு பயணம் செய்தாலும் வெளிநாட்டு நாணயத்தில் $3000 டாலர் வரை எடுத்துச் செல்லலாம். இந்த வரம்பை மீறும் தொகைகளுக்கு பயண சோதனைகள் நடத்தப்படும்.
விமானங்களில் பேக்கேஜ் எடுத்துச் செல்வதற்கான வரம்புகள்: பணத்துடன் பேக்கேஜ் விதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக 7 முதல் 14 கிலோ வரையிலான பேக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.
செக்-இன் பேக்கேஜுகளுக்கு அனுமதிக்கப்பட்ட எடை வரம்பு 20 முதல் 30 கிலோவாகும். இந்த வழிகாட்டுதல்கள் பொதுவாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களுக்கு ஒரே மாதிரியானவை. இருப்பினும் குறிப்பிட்ட விவரங்களை பெறுவதற்கு உங்கள் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்: விமானங்களில் எடுத்துச் செல்லக் கூடாத சில பொருட்கள் உள்ளன. இந்த விதிமுறைகளை புரிந்து கொள்வது அவசியம். பாதுகாப்பு காரணங்களுக்காக க்ளோரின், ப்ளீச் போன்ற அபாயகரமான ரசாயனங்களை எடுத்துச் செல்லக்கூடாது. எனவே பேக்கிங் செய்வதற்கு முன் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த பட்டியலை சரி பாருங்கள்.
உள்நாட்டு விமானங்களில் மதுவை எடுத்துச் செல்வது: உள்நாட்டு விமானங்களில் மதுவை எடுத்துச் செல்வது உங்கள் செக்கின் பேக்கேஜில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கும் வரம்பு உள்ளது. 5 லிட்டர் வரை மதுவை நீங்கள் கொண்டு வரலாம். மேலும் இது விமான நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பற்றி தெரிந்து கொண்டு, பயணம் செய்யும்போது தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தைப் பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications