இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் விமான சேவை வழங்கும் கம்பெனிகள் எல்லாமே, நாலு காசை லாபமாக பார்ப்பதற்குள், படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா வந்த பின், விமான சேவை நிறுவனங்கள் மேலும் பல நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது அந்த பிரச்சனை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போல, விமான எரிபொருள் விலையை வேறு உயர்த்தி இருக்கிறார்கள்.
விலை ஏற்றம்
விமானங்களில், ஏர் டர்பைன் ஃப்யூயல் என்று சொல்லப்படும் ATF எரிபொருளைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த எரிபொருளின் விலையை, எண்ணெய் மார்க்கெட்டிங் கம்பெனிகள், சுமார் 48 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறார்களாம். அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டருக்கு) சுமாராக 11,000 ரூபாய் அதிகரித்து இருக்கிறார்களாம்.
நகரங்களில் விமான எரிபொருள் விலை
எனவே இனி விமானங்கள், டெல்லியில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு கிலோ லிட்டருக்கு 33,575 ரூபாய் செலுத்த வேண்டுமாம். மும்பையில் விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு 33,070 ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். கொல்கத்தாவில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் விலை 38,543 ரூபாய்க்கு விற்கப்படுமாம்.
கொரோனா கட்டுப்பாடுகள்
ஏற்கனவே விமான சேவை நிறுவனங்கள் தங்களின், வியாபாரத்தில் லாபம் பார்க்க முடியாத படிக்கு "நடு சீட்டை காலியாக விடுவது" அல்லது கொரோனா பரவாமல் இருக்கும் விதத்தில் "பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அளிப்பது" போன்ற செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு மத்தியில் எரிபொருள் விலை ஏறினால், குண்டைத் தூக்கி போட்டது போலத் தானே இருக்கும்.
பயணிகள் எண்ணிக்கை
கடந்த 31 மே 2020 அன்று, இந்தியாவில் 501 விமானங்களை இயக்கி இருக்கிறார்களாம். அதில் மொத்தம் 44,593 பயணிகள் பயணம் செய்து இருக்கிறார்களாம். ஆக சுமாராக 180 பேர் பயணிக்க வேண்டிய விமானங்களில் சுமாராக 100 பேர் கூட பயணிக்கவில்லை. ஆக பயணிகள் எண்ணிக்கையும் போதுமான படிக்கு இல்லை.
பாவம் விமான சேவை கம்பெனிகள்
1. பயணிகள் எண்ணிக்கை பழைய படி இல்லை.
2. பயணிகள் பாதுகாப்புக்கு நடு சீட்டை விடுவது (அ) பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுப்பது கூடுதல் செலவு.
3. இப்போது விமான எரிபொருள் விலை ஏற்றம்... இப்படி சுற்றி சுற்றி அடித்தால் விமான சேவை கம்பெனிகள் என்ன தான் செய்வார்கள். எப்போது லாபம் பார்ப்பார்கள்? எல்லாம் கம்பெனிக்கு தான் வெளிச்சம்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications