ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் சட்டையில்லாமல், மசாஜ் செய்துக்கொண்ட படியே ஏர்ஏசியா ஊழியர்கள் முன்னிலையில் வீடியோ கான்பிரென்சிங் முறையில் மீட்டிங்-ல் கலந்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக நிறுவனங்களில் மீட்டிங் நடக்கும் போது, குறிப்பாக வீடியோ கான்பிரென்சிங் முறையில் மீட்டிங் நடக்கும் போது சரியான உடைகளை அணிய வேண்டும் என்பதை பல நிறுவனங்களில் கடுமையான முறையில் கடைபிடிக்கும் விதிகளாக இருக்கும் பட்சத்தில், ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் சட்டையில்லாமல் மசாஜ் செய்துக்கொண்ட படியே மீட்டிங்-ல் கலந்துக்கொண்டது பலருக்கும் அதிர்ச்சி அளித்தாலும் இதற்கு பின்பு ஒரு விஷயம் உள்ளது.

டோனி பெர்னாண்டஸ்ஏர் ஏரியாவின் இந்தோனேஷிய வர்ததகத்தின் பணி கலாச்சாரத்திற்காக பாராட்டி லிங்க்டுஇன் தளத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இருப்பினும், சட்டையின்றி நிர்வாகக் கூட்டத்திற்கு அவர் வந்தது பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த வாரம் மிகவும் மன அழுத்தமான காலக்கட்டமாக இருந்தது, வெரானிடா யோசெஃபின் மசாஜ் செய்ய பரிந்துரைத்தார். இந்த நிலையில் மசாஜ் செய்து நிர்வாகக் கூட்டத்தை நடத்த முடியும் என்ற இந்தோனேசியா மற்றும் ஏர் ஏசியா கலாச்சாரத்தை கட்டாயம் பாராட்டியாக வேண்டும் எண பதிவிட்டு உள்ளார் டோனி பெர்னாண்டஸ்.
வெரானிடா யோசெஃபின் இந்தோனேசியா நாட்டின் ஏர் ஏசியா வர்த்தக பிரிவின் தலைவர் ஆவார். தற்போது டோனி பெர்னாண்டஸ் கேப்பிடல் ஏ என்னும் ஏர் ஏசியா குரூப்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். டோனி பெர்னாண்டஸ் லிங்க்டுஇன் பதிவுக்கு சுமார் 600 பேர் லைக் செய்து 50 பேர் கமெண்ட் செய்து 16 பேர் ஷேர் செய்துள்ளனர்.
மேலும் இந்த பதிவில் ஏர் ஏசியா நிறவனத்தில் நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இப்போது கேபிடல் ஏ கட்டமைப்பை இறுதி செய்துள்ளேன் எனவும் டோனி தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார். ஏர்ஏசியாவின் உற்சாகமான நாட்கள் வரவுள்ளன, நாங்கள் கட்டியமைத்ததை கண்டு பெருமிதம் கொள்கிறோம் என டோனி பெர்னாண்டஸ் லிங்க்டுஇன் தளத்தில் பதிவிட்டார்.
இந்தோனேசியா நாட்டின் ஏர் ஏசியா இத்தகைய வசதிகள் இருந்தாலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சிஇஓ-வின் இத்தகைய செயல் ஏற்புடையது அல்ல. குறிப்பாக நிர்வாக கூட்டத்தில் பெண் அதிகாரிகளுக்கும் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்துக்கொண்டே சட்டையில்லாமல் மீட்டிங்-ல் கலந்துகொள்வது சரியானது இல்லை. இதை கட்டாயம் பெண் ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் பலர் பதிவிட்டு உள்ளனர்.
டோனி பெர்னாண்டஸ் பதிவிட்ட போட்ட குறித்து உங்க கருத்து என்ன கமெண்ட பண்ணுங்க.


Click it and Unblock the Notifications