தமிழ்நாட்டுக்கு வரும் ஏர்பஸ் விமான தொழிற்சாலை? ஓசூர் - தூத்துக்குடி.. லிஸ்ட் போட்ட டாடா குழுமம்..!!

விமான உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பிரான்ஸ் நாட்டின் நிறுவனமான ஏர்பஸ் மற்றும் இந்தியாவின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (TASL) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இரண்டாவது விமான உற்பத்தி நிலையத்தை அமைக்க எட்டு இடங்களை தேர்வு செய்துள்ளது. இந்த 8 இடங்களில் தமிழ்நாடும் ஒரு முக்கிய தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏவியேஷன் துறையில் தனியார் துறை முதலீடுகள் அதிகமாக உள்ளது.

ஏர்பஸ் - டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் அமைக்க உள்ள 2வது அசம்பிளி தொழிற்சாலைக்கான அறிவிப்பு முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. இந்திய விமானப்படைக்கான C295 என்னும் போக்குவரத்து விமானத்தைத் தயாரிக்கும் அசம்பிள் தொழிற்சாலை கட்டுமான பணிகள் ஏற்கனவே முடிந்து இக்கூட்டணியின் முதல் உற்பத்தி நிலையம் திறக்கப்படுவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில் 2வது அசம்பிளி லைன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டுக்கு வரும் ஏர்பஸ் விமான தொழிற்சாலை? ஓசூர் - தூத்துக்குடி.. லிஸ்ட் போட்ட டாடா குழுமம்..!!

இந்த புதிய உற்பத்தி நிலையம் H125 ரக ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த அசம்பிளி லைன் ஏர்பஸ்-ன் பிரான்ஸ், பிரேசில் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆலைகளுக்குப் பிறகு இந்த ஒற்றை-எஞ்சின் ஹெலிகாப்டருக்கான நான்காவது உற்பத்தி நிலையமாக இருக்கும்.

இந்த ஆலை ஆண்டுதோறும் சுமார் 10 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும், அவற்றில் முதலாவது 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும். அடுத்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தான் தவிர்த்து இந்திய மற்றும் அதன் துணை நாடுகளில் சுமார் 500 ஹெலிகாப்டர்களுக்கான டிமாண்ட் இருக்கும் என்று ஏர்பஸ் எதிர்பார்க்கிறது, இதன் அடிப்படையில் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கத் தயாராகியுள்ளது. ஒரு H125 ஹெலிகாப்டரின் ஆரம்ப விலை ரூ.30 கோடி.

புதிய இந்திய ஆலை பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆலையைப் போன்றே அதி நவீன முறையில் இருக்கும், மேலும் இன்ஜின் உட்பட பெரும்பாலான முக்கிய துணை அமைப்புகள் மற்றும் பாகங்கள் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். இந்த ஆலையில் எவ்வளவு முதலீடு செய்யப்படும் அல்லது எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதை ஏர்பஸ் இதுவரையில் தெரிவிக்கவில்லை.

ஏர்பஸ் நிறுவனத்தின் பிரேசில் ஆலையும் வருடத்திற்கு சுமார் 10 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்கிறது, இதில் சுமார் 500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஆனால் பிரேசில் ஆலையில் சில கூடுதல் பிரிவுகளும் உள்ளது கவனிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவிலும் தென் ஆசியாவிலும் 10 ஏர்பஸ் H125 ஹெலிகாப்டர்களை விற்பனை செய்யப்பட்டு உள்ளது என ஏர்பஸ் ஹெலிகாப்டர்களின் தலைவர் சன்னி குங்லானி தெரிவித்தார்.

டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் விரைவில் வடோதராவில் இந்திய விமானப்படைக்கான C295 போக்குவரத்து விமானத்திற்கான முதல் ஏர்பஸ் உற்பத்தி நிலையத்தைத் திறக்க உள்ளது, இந்த தொழிற்சாலையின் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், குஜராத் மாநிலத்தின் வதோதரா இந்த எட்டு இடங்களில் ஒன்றாக இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஏர்பஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (TASL) நிறுவன கூட்டணி லிஸ்ட் போட்டு உள்ள எட்டு இடங்களில் தமிழ்நாடு இடம்பெற்று இருந்தால் கட்டாயம் ஓசூர் மற்றும் தூத்துக்குடி முக்கிய தேர்வாக இருக்கும். ஓசூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே ஏவியேஷன் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

அதேபோல் விமான தயாரிப்புக்கான உரிபாகங்கள், துணை அமைப்புகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதால் தூத்துக்குடி முக்கிய தேர்வாக இருக்கலாம். தூத்துக்குடியில் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது, இதோடு இது தமிழ்நாடு ஏவியேஷன் துறைக்கு முக்கிய பலமாக இருக்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் தூத்துக்குடியில் புதிய ஏர்பஸ் தொழிற்சாலை வரும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் ஆக இருக்கும். இதேபோல் ஏர்பஸ் மற்றும் டாடா கூட்டணி டிக் செய்துள்ள 8 இடங்களில் தமிழ்நாடு உள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+