பொதுவாக பண்டிகை காலங்கள், விடுமுறைகள் போன்றவற்றிற்கு விமான கட்டணங்கள் உயர்வது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் முக்கியமான நகரங்களில் இருந்து செல்லும் விமானங்களின் கட்டணம் இந்த ஆண்டு தீபாவளிக்கு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதே போல ஓணம் பண்டிகைக்காக கேரளா மாநிலத்திற்கு செல்லும் விமானங்களின் கட்டணமும் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 12-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. எனவே கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரையில் விமானக் கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதன்படி மும்பையிலிருந்து ஹைதராபாத் வரை செல்லும் விமான டிக்கெட் கட்டணம் 21 சதவீதம் அதிகரித்து 5,162 ரூபாயாக உள்ளது. அதேபோல மும்பையிலிருந்து ஹைதராபாத் வரை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் 19 சதவீதம் அதிகரித்து 5,999 ரூபாயாக உள்ளது. டெல்லியில் இருந்து கோவா வரை மற்றும் டெல்லியில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணமும் 19% அதிகரித்து 4,930 ரூபாயாக உள்ளது.
அது மட்டுமின்றி மற்ற சில வழித்தடங்களிலும் விமான கட்டணம் 1 முதல் 16 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ixigo குழுமத்தின் இணை-தலைமை நிர்வாக அதிகாரி ரஜ்னிஷ் குமார் கூறுகையில், தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமானக் கட்டணமும் அதிகரித்துள்ளது.
டெல்லி-சென்னை, மும்பை-பெங்களூரு மற்றும் டெல்லி-ஹைதராபாத் போன்ற பிரபலமான வழித்தடங்களில் சராசரியாக ஒரு வழி விமானக் கட்டணம் ரூ. 4,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 முதல் 15 சதவிகிதம் அதிகரிப்பு என்று கூறியுள்ளார்.
விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் சில வழித்தடங்களில் 1 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை கட்டணங்கள் குறைக்கப்பட்டும் உள்ளன. அந்த வகையில் மும்பை-அகமதாபாத் விமானத்திற்கான டிக்கெட் விலை 27 சதவீதம் குறைந்து ரூ.2,508 ஆகவும், மும்பை-உதைபூர் விமானத்தின் டிக்கெட் விலை 25 சதவீதம் குறைந்து ரூ.4,890 ஆகவும் உள்ளது.
பெங்களூரு-ஹைதராபாத் விமானத்தைப் பொறுத்தவரை, கட்டணம் 23 சதவீதம் குறைந்து ரூ.3,383 ஆகவும், மும்பை-ஜம்மு விமானத்திற்கான கட்டணம் 21 சதவீதம் குறைந்து ரூ.7,826 ஆகவும் உள்ளது.
கேரளாவில் வரும் ஓணம் பண்டிகைக்காக சில வழித்தடங்களில் விமான கட்டணம் 1 முதல் 25 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சில வழித்தடங்களில் 6 முதல் 35 சதவிகிதம் வரை கட்டணம் குறைந்துள்ளது.
ஹைதராபாத்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் கட்டணம் 30 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,102 ரூபாயாக உள்ளது. இதேபோல், மும்பை-காலிகட் வழித்தடத்திலும் கட்டணம் 30 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,448 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் பெரும் கவலை எழுந்துள்ளது. தேவையற்ற கட்டண உயர்வு காரணமாக மக்கள் கஷ்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஆன்லைன் தளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு மக்களவையில் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications