நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களுக்கு புதிய பெயர் சூட்டப்பட உள்ளது. மத்திய அரசுக்கு இந்த திட்டத்திற்கான கோரிக்கைகள் வந்துள்ளதாக சிவில் விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமான நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்ய 10 மாநில அரசுகளிடம் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 25-ஆம் தேதி அன்று, 22 விமான நிலையங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 10 மாநில அரசுகள் முன் வைத்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இணையமைச்சர் முரளிதர் மொஹோல், லோக்சபாவில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ பதிவில், பெரும்பாலான விமான நிலையங்களுக்கு அவை அமைந்துள்ள நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்ட கோரிக்கைகள் வந்துள்ளன என்று கூறியுள்ளார்.

ஒரு மாநில அரசு விமான நிலையத்திற்கு புதிய பெயர் சூட்ட விரும்பினால், அந்த மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அவை அனுப்பப்படும். ஆனால் அந்த செயல்முறைக்கு முன்பு மற்ற துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் சேர்ந்து கலந்தோசித்து மதிப்பாய்வை பெற வேண்டும்.
மறுபெயரிடப்படும் விமான நிலையங்களின் பட்டியல்:
ஆந்திரப்பிரதேசம்: திருப்பதி விமான நிலையத்தை "ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். மேலும் 3 விமான நிலையங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
பீகார்: தர்பங்கா விமான நிலையத்திற்கு "வித்யாபதி விமான நிலையம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹரியானா: ஹரியானாவில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள 4 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய பிரதேசம்: ஒரு விமான நிலையத்திற்கு புதிய பெயர் கோரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா: ஷீரடி விமான நிலையத்தை "ஸ்ரீ சாய்பாபா சர்வதேச விமான நிலையம்" என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேலும் இந்த விமான நிலையம் உட்பட 5 விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
மணிப்பூர்: மணிபூரியில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கூறி உள்ளனர்.
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்தரகாண்ட்: இந்த மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தின் பெயரை மாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.
உத்தரபிரதேசம்: நான்கு விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த மாற்றங்கள் விமான நிலையங்களின் அடையாளத்தை மாற்றுவதோடு, அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. இருப்பினும், இந்த பெயர் மாற்றங்கள் பயணிகளுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் பெயர் மாற்றம் செய்ய இருக்கும் புதிய விமான நிலையங்களின் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications