இந்தியாவில் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கட்டண உயர்வு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இருந்தாலும் நாம் இந்த கட்டுரையில் பகிரப்போகும் சின்ன ட்ரிக்கை ஃபாலோ செய்தால் புதிய கட்டண முறையில் இருந்து தப்பிக்கலாம்.
ஏர்டெல் மற்றும் ஜியோ தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான புதிய கட்டணம் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கட்டணமானது 12 முதல் 25 சதவீதம் வரையும், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் 11 முதல் 21 சதவீதம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக ஜியோவின் பிரபலமான நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கக்கூடிய 239 ரூபாய் மாதாந்திர திட்டம் தற்போது 299 ரூபாய் என 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் புதிய கட்டண முறையில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. அதாவது ஜூலை மூன்றாம் தேதிக்கு முன்பாக ரீசார்ஜ் செய்து கொள்பவர், பழைய கட்டணத்திலேயே ரீசார்ஜ் செய்ய முடியும். தற்போது நடைமுறையில் இருக்கும் பிளான் முடிந்த உடன் இந்த ரீசார்ஜ் தானாகவே பயன்பாட்டுக்கு வந்துவிடும். வாடிக்கையாளர்கள் கூடுதலாக எந்த ஒரு பணத்தையும் செலுத்த வேண்டியது இல்லை.
எனவே ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜூலை 3ஆம் தேதிக்குள் அட்வான்ஸாக ரீசார்ஜ் செய்து கொண்டால் புதிய கட்டண முறையிலிருந்து சற்றே பணத்தை சேமிக்க முடியும். இந்த அட்வான்ஸ் ரீசார்ஜ் நடைமுறை ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதனிடையே ஜியோ நிர்வாகம் தங்களது வாடிக்கையாளர்கள் 50 ரீசார்ஜ் வரை அட்வான்ஸ் முறையில் queue up செய்து கொள்ள முடியும், மாதாந்திர அடிப்படையில் அல்லது ஆண்டுதோறும் என்ற அடிப்படையில் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் ஏர்டெல் எத்தனை முறை இது போல அட்வான்ஸ் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பை வெளியிடவில்லை. ஏர்டெல்லை பொறுத்தவரை தங்களுடைய 5 ஜி டேட்டா சலுகையில் எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் ஜியோ வாடிக்கையாளர்கள் 2 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 5ஜி டேட்டாவை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
ப்ரீபெய்டு கட்டணங்கள் உயர்வு என்பது நமது மாதாந்திர பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த நான்கு நாட்கள் கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு அட்வான்ஸ் ரீசார்ஜ் செய்து கொள்வது புத்திசாலித்தனம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications