இந்திய டெலிகாம் சந்தையில் கடுமையான வர்த்தகப் போட்டி நிலவி வருகிறது. ஒருபக்கம் வாடிக்கையாளர்களுக்காகவும், வர்த்தக விரிவாக்கத்திற்காகவும் ஏர்டெல் மற்றும் ஜியோ கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் மறுமுனையில் வோடபோன் ஐடியா நிறுவனம் இருக்கும் வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து சேவையை அளிக்கவும் நிதி திரட்டி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
3 மாதம் தொடர் வளர்ச்சி
ஏர்டெல் மற்றும் ஜியோ மத்தியிலான போட்டியில் யார் அதிக வாடிக்கையாளர்களைப் பெறுகிறார்கள் என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக ஜியோவை பின்னுக்குத்தள்ளி ஏர்டெல் தொடர்ந்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.
ஜியோ Vs ஏர்டெல்
அதிகளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது மூலம் ஜியோ தொடர்ந்து வையர்லெஸ் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக உள்ளது. ஜூலை 2020 வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் 33 லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையில், ஜியோ 36 லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆனால் இதன் பின்பு 3 மாதம் தொடர்ந்து வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் ஏர்டெல் முதன்மையாக உள்ளது.
ஜூலை முதல் அக்டோபர் 2020
இந்நிலையில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் 1.36 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, ஆனால் ஜியோ அதிகளவிலான சேவையை விரிவாக்கம் செய்யும் 91 லட்ச வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை வர்த்தகம் ஜூலை முதல் அக்டோபர் காலகட்டத்தில் 0.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
வோடபோன் ஐடியா
மறுமுனையில் வோடபோன் ஐடியா ஜூலை முதல் அக்டோபர் காலக்கட்டத்தில் 27 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதோடு அரசு டெலிகாம் சேவை நிறுவனங்களான பிஎஸ்என்எல் 10,208 வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் 7,307 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
கொரோனா லாக்டவுன்
ஏர்டெல் மே மாதத்தில் இருந்து பெரிய ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் தடாலடியாக உயர்ந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணத்தால் மே மாதம் 40 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் ஜூலை மாதம் 3 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications