தம்பியின் சொத்தை வாங்க துடிக்கும் அண்ணன்.. காலக்கெடுவை நீடிக்க ரிலையன்ஸ் ஜியோ கோரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அனில் அம்பானிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளபட்டுள்ள நிலையில், இந்த நிறுவனத்தினை ஏலத்தில் எடுக்க பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், தனியார் பங்கு நிறுவனமான வர்தே பார்ட்னர் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தம்பியின் நிறுவனத்தை வாங்க அண்ணன் முகேஷ் அம்பானி, நவம்பர் 11,2019 தான் விண்ணபிக்க கடைசி நாள் என்ற நிலையில், இதை இன்னும் 10 நாள் காலக்கெடு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.

இந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரமை வாங்க, ஏர்டெல் நிபந்தனை ஏலம் எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விடுப்பு எடுத்த 4 பெண்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிய சோகம்..! யாருக்காவது விடுப்பு வேண்டுமா..?விடுப்பு எடுத்த 4 பெண்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிய சோகம்..! யாருக்காவது விடுப்பு வேண்டுமா..?

6 பேர் விண்ணப்பம்

6 பேர் விண்ணப்பம்

பாரதி இன்ஃப்ராடெல் மொபைல் கோபுரங்களுக்கான ஏலங்களை சமர்பித்துள்ளதாக பார்தியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனில் அம்பானியின் தலைமையிலான சொத்துகளை வாங்குவதற்காக, கடந்த திங்கட்கிழமையோடு 6 பேர் மொத்தம் ஏலம் எடுத்துள்ளதாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வங்கி வட்டாரங்கள் கூறுவதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

ஏலம் எப்போது?

ஏலம் எப்போது?

இந்த நிலையில் 6 நிறுவனங்கள் ஆர்காமை வாங்குவதற்காக ஆர்வம் தெரிவித்துள்ளன. அதில் பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், தனியார் ஈக்விட்டி நிறுவனமான வர்தே பார்ட்னர்ஸ் உள்ளிட்டோர் இதில் அடங்குவர். இந்த ஏலம் நவர்பர் 13, 2013 ஆன இன்று கூடும் என்று ஆர்காம் வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், இது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் அரசு வட்டாரத்தில் இந்த நிறுவனத்திற்கான ஏலம் ஜனவரி 10,2020ல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

சொத்துகளின் மதிப்பு

சொத்துகளின் மதிப்பு

இந்த ஏலத்தில் இடங்கள் மற்றும் கட்டிடங்கள் தவிர, தொலைத் தொடர்பு சொத்துகளில் முக்கியமான ஸ்பெக்ட்ரம் 122 மெகா ஹெர்ட்ஸ் அடங்கும் என்றும், இதன் மதிப்பு 14,000 கோடி ரூபாய் இருக்கலாம் என்றும், இதே இதன் டவர் வர்த்தகம் 7,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் 3,000 கோடி ரூபாய் மதிப்பு என்றும், டேட்டா மற்றும் தரவு மையங்களின் மதிப்பு 4,000 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

எவ்வளவு கடன்?

எவ்வளவு கடன்?

ஆர்.காம் குழுமத்தின் மொத்த கடன் சுமார் 33,000 கோடி ரூபாய் என்று ஆதாரங்கள் மதிப்பிட்டுள்ளன. எனினும் கடன் வழங்குனர்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 49,000 கோடி ரூபாய் கோரிக்கையை சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் படி வட்டி அதிகரித்து சுமார் 90,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த மே மாதமே ஒர் அறிக்கையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. (https://tamil.goodreturns.in/news/2019/05/13/reliance-communication-lenders-may-to-claim-up-to-rs-90-000-014551.html)இந்த நிலையில் திவால் நிறுவனங்களிலேயே அனில் அம்பானியின் ஆர்காம் தான் டாப் என்றும் கூறப்பட்டது. அண்ணன் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் டாப் என்றால், தம்பி கடன் அளவில் டாப்பில் உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel, Bharti infratel, varde partners are among six bidders for RCom

Airtel, Bharti infratel, varde partners are among six bidders for RCom. reliance jio asked Rcom extension another 10 days of deadline for asset sale
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X