டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மோசமான காலமாகவே இருந்து வருகிறது. அதிலும் ஜியோவின் வருகைக்கு பின்னர் இது இரண்டு மடங்கு பிரச்சனைகளை சந்தித்து வந்தது என்றே கூறலாம்.
அதிலும் அதிகளவிலான சலுகைகள், கட்டண குறைவு, அன்லிமிடெட் இலவச சேவை, குறைந்த டேட்டா கட்டணம் என ஜியோ களைகட்டி வந்தது. இதுபோன்ற அதிரடியான ஜியோவின் சலுகைகளால் மற்ற நிறுவனங்கள் ஆட்டம் கண்டது உண்மையே.
இப்படி ஒரு நிலையில் தொடர் நஷ்டத்தினை கண்டு வந்த நிறுவனங்களுக்கு மேலும் பிரச்சனை அதிகரிக்கும் விதமாக ஐயூசி கட்டணம், அரசின் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என அடுத்தடுத்த பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கின.
ஜியோவை வீழ்த்த சலுகை
ஆக அதுவரையில் ஜியோவின் சலுகைக்கு இணையாக சலுகைகளை அறிவித்து வந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள், முதல் முறையாக கட்டண அதிகரிப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன. ஏன் இப்படி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன என்றே கூட கூறலாம். இது வரை இலவச கால்கள் என்று அளித்து வந்த ஜியோ தற்போது ஐயூசி கட்டணத்தை வசூலிக்க தொடங்கியுள்ளது. இது தான் சமயம் என்று ஏர்டெல் நிறுவனம் தற்போது இலவச கால் சேவையினை வழங்கி வருகிறது. மேலும் பல சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
சற்று வீழ்ச்சி
இதுவரை பலத்த லாபத்தை மட்டுமே பெற்று வந்த ஜியோ நிறுவனம், தற்போது ஏர்டெல்லின் குறிப்பிட்ட சலுகைகளால் அதிர்ந்து போயுள்ளது என்று தான் கூற வேண்டும். இதன் ஒரு பகுதியாக தற்போது ஏர்டெல் தனது தொலைத் தொடர்புத் திட்டங்களின் விலையை தாமதமாக அதிகரித்து வருகிறது, ப்ரீபெய்ட் திட்டம் தான் இப்படி என்றால் போஸ்ட் பெய்டு சேவையில் இதுவரை பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.
ஜியோ ஃபைபருடன் போட்டி போடும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்
ஆனால் தற்போது ஏர்டெல்லின் கவனம் பிராட்பேண்ட் பக்கம் திரும்பியுள்ளது. ஏர்டெல்லின் இந்த ஆஃபர், ஜியோ ஃபைபர் போட்டிக்கு வருவதால் தரவு மற்றும் மூன்றாம் தரப்பு சந்தா சலுகைகள் குறித்து ஏர்டெல் நன்மைகளை அதிகரித்து வருகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் என மறுபெயரிடப்பட்ட பின்னர், ஏர்டெல் தற்போது வரம்பற்ற டேட்டா பேக்குகளுடன் ஜியோ ஃபைபரை விஞ்ச முயற்சி செய்து வருகிறது.
பிராட்பேண்ட் திட்டத்துடனும் + டாப் அப்
குறைந்த வேகத்துடன் தனிப்பட்ட வரம்பற்ற டேட்டா பேக்குகளை வழங்குவதற்கு பதிலாக, ஏர்டெல் தற்போது அதன் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வரம்பற்ற சேவையினை அளிக்கிறது. அப்படி என்ன சலுகை என்று கேட்கிறீர்களா? பயனர்கள் தற்போது கிடைக்கக்கூடிய எந்தவொரு பிராட்பேண்ட் திட்டங்களுடனும் ரீசார்ஜ் செய்யலாம், பின்னர் நெட்வொர்க்கில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க 299 ரூபாய் டாப்-அப் செய்யலாம். ஏற்கனவே வரம்பற்ற டேட்டாவை வழங்கி வரும் விஐபி திட்டத்தைத் தவிர அனைத்து திட்டங்களுக்கும் டாப்-அப் செல்லுபடியாகும்.
இவர்களுக்கெல்லாம் வரம்பற்ற டேட்டா
எனவே, மாதத்திற்கு 799 ரூபாய் மதிப்புள்ள அடிப்படை திட்டத்தையும், மற்றோரு திட்டமான 999 ரூபாய் மதிப்புள்ள பொழுதுபோக்கு திட்டத்தையும், மாதத்திற்கு 1,499 ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் திட்டத்தையும் வாங்கும் பயனர்கள் ரூ.299 டாப்-அப் வாங்குவதன் மூலம் 1 மாதத்திற்கு வரம்பற்ற தரவைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
விஐபி திட்டத்திற்கு டாப் அப் செய்ய முடியாது
ஏர்டெல்லின் பல திட்டங்களுடன் இந்த டாப் அப்பை செய்தாலும், மாதத்திற்கு 3,999 ரூபாய் செலவாகும் விஐபி திட்டத்திற்கு இந்த டாப் அப் திட்டம் பொருந்தாது. ஏனெனில் இது ஏற்கனவே ஒரு மாதத்திற்கு வரம்பற்ற தரவையும், 1 ஜிபிபிஎஸ் நெட்வொர்க் வேகத்தையும் வழங்கி வருகிறது.
பயனர்களுக்கு அதிக லாபம்
ஏர்டெல்லின் 299 ரூபாய் டேட்டா வரம்புடன், ஏர்டெல் பயனர்கள் இப்போது வரம்பற்ற தரவை பல்வேறு விலைகளில் அனுபவிக்க முடியும். பெரும்பாலான பயனர்களுக்கு 799 ரூபாய் மதிப்புள்ள அடிப்படை திட்டம் முன்பை விட இப்போது அதிக லாபத்தை தருகிறது. ஏனெனில் அடிப்படை திட்டம் ஏற்கனவே 100Mbps மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா வேகத்தில் மாதத்திற்கு 150 ஜிபி தரவை வழங்குகிறது. வரம்பற்ற டேட்டா டாப்-அப் திட்டத்தைச் சேர்ப்பது 100Mbps வேகத்தைக் கொடுக்கும்.
மற்ற பிரைம் சலுகைகள்
மேலும் 999 ரூபாய் முதல் தொடங்கும் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களிலும் உங்களுக்கு மூன்று மாதங்கள் இலவச நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஆகியவற்றுக்கு இலவச சந்தாவை வழங்கி வருகிறது.
ஆக ஏர்டெல்லின் இந்த அதிரடியான சலுகை நிச்சயம் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும், ஜியோ வோடபோனுக்கு போட்டியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications