ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்: ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்..ஆடிப்போன ஜியோ

சென்னை: உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் சாட்ஜிபிடி ,கூகுளின் ஜெமினி ,பேஸ்புக்கின் மெட்டா உள்ளிட்டவை முன்னிலையில் இருக்கின்றன .

ஏர்டெல்லின் ஏஐ புரட்சி: ஏஐ சந்தையில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது Perplexity AI நிறுவனம். பெர்பிளெக்சிட்டி நிறுவனம் அண்மையில் தான் கூகுளுக்கு போட்டியாக ஏஐ அடிப்படையிலான காமட் என்ற ஒரு தேடுபொறியை அறிமுகம் செய்தது. ஏஐ தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் வரவேண்டும் என்பதில் பெர்பிளெக்சிட்டி நிறுவனம் தீவிரமாக இருக்கிறது. இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு உகந்த சந்தை என்பதை உணர்ந்திருக்கும் இந்த நிறுவனம் ஏர்டெல்லுடன் இணைந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்: ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்..ஆடிப்போன ஜியோ

Perplexity உடன் கைக்கோர்த்த ஏர்டெல்: இதன்படி ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் 12 மாதத்திற்கு Perplexity Pro AI செயலியை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சாதாரணமாக நாம் Perplexity Pro AI சந்தா பெற வேண்டும் என்றால் ஓராண்டுக்கு 17,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு Perplexity Pro AI வசதியை கட்டணமே இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது .

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசம்: ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள், வைஃபை பயன்படுத்துபவர்கள் மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் என அனைவருமே அடுத்த 12 மாதத்திற்கு இலவசமாக Perplexity Pro AI வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். Perplexity Pro AI என்பது பல்வேறு நவீன ஏஐ வசதிகளை வழங்க கூடியதாக இருக்கிறது. படங்களை உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட பைலை அப்லோடு செய்துவிட்டு அதனை பகுப்பாய்வு செய்து வழங்க செய்வது, நம்முடைய மெயில்களை படித்து காட்டுவது, ஆய்வுகளுக்கு தரவுகளை வழங்குவது என பல சேவைகளை வழங்குகிறது.

360 மில்லியன் வாடிக்கையாளர்கள்: இந்த இலவச அறிவிப்பின் மூலம் ஏர்டெல்லை சேர்ந்த 360 மில்லியன் வாடிக்கையாளர்கள் இலவசமாக Perplexity Pro AI சந்தாவை பெற இருக்கின்றனர். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் நவீன ஏஐ கருவியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன கோபால் விட்டெல் தெரிவித்து இருக்கிறார்.

ஓராண்டுக்கு இலவசம்: இந்தியாவின் அனைத்து தரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் Perplexity Pro AI சென்று சேர்கிறது என்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்திருப்பதாக இதன் துணை நிறுவனரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் ,வேலைக்கு செல்பவர்கள், தொழில் புரிபவர்கள் என அனைவருமே இந்த இலவச சந்தாவை கொண்டு பயன்பெறலாம், தங்களுடைய வேலைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் கிடைக்கும்: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலிக்கு செல்ல வேண்டும் அதில் லாகின் செய்து ரிவார்ட்ஸ் என்பதை கிளிக் செய்தாலே உங்களுக்கு இந்த சந்தா கிடைத்துவிடும். Perplexity AI என்பது 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு செயலி ஆகும். வழக்கமாக நாம் google தேடு பொறியில் தேடக்கூடிய விஷயங்கள் போல இல்லாமல் இதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு மிகத் துல்லியமான பதில்கள் கிடைக்கும். பாரம்பரிய தேடு பொறிகளில் இருந்து மக்கள் தற்போது இது போன்ற ஏஐ அடிப்படையிலான தேடு பொறிகளுக்கு மாறி வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+