ஆனால் வேறு சில விஷயங்களில் பார்தி ஏர்டெல் இன்னும் வலுவாகத் தான் இருக்கிறது என்பதை, ஓபன் சிக்னல் (Open Signal) என்கிற மொபைல் அனலிடிக்ஸ் கம்பெனி வெளியிட்டு இருக்கும் Mobile Network Experience Report 2020 சொல்கிறது.
ஓபன் சிக்னல் கம்பெனியின் இந்த அறிக்கையில், பல்வேறு பிரிவுகளில், எந்த நெட்வொர்க், எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என ஆராய்ந்து விருது கொடுத்து இருக்கிறது.
வாங்க பார்க்கலாம்
எந்த விஷயத்தில் எல்லாம் ரிலையன்ஸ் ஜியோவை, சுனில் மித்தலின் பார்தி ஏர்டெல் முந்தி இருக்கிறது? ரிலையன்ஸ் ஜியோ எந்த விஷயத்தில் எல்லாம் முதலிடத்தில் இருக்கிறது? வொடாபோன் ஐடியா எதிலாவது முதலிடம் பிடித்து இருக்கிறதா? என எல்லாவற்றையும் இந்த கட்டுரையில் பார்ப்போம். முதலில் ஏர்டெல் முதலிடம் பிடித்து இருக்கும் விஷயங்களைப் பார்த்துவிடுவோம்.
1. வீடியோ அனுபவம் (Video Experience)
இந்தியாவில் இருக்கும் நெட்வொர்க்குகளிலேயே, வீடியோ அனுபவத்தில், பார்தி ஏர்டெல் மட்டுமே, ஓபன் சிக்னலின் Good பிரிவில் இருக்கிறதாம். நான்காவது ஆண்டாக வீடியோ அனுபவத்தில் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது ஏர்டெல். வொடாபோன் ஐடியா இரண்டாவது இடத்தையும், ரிலையன்ஸ் ஜியோ மூன்றாவது இடத்தையும் பிடித்து இருக்கிறதாம்.
2. கேமிங் அனுபவம் (Gaming Experience)
அதே போல கேமிங் அனுபவத்தில் 100-க்கு 55.6 புள்ளிகளைப் பெற்று, முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது பார்தி ஏர்டெல் கம்பெனி. இந்த பிரிவிலும், வொடாபோன் ஐடியா (புதிய பிராண்ட் விஐ) கம்பெனி இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த பிரிவில், வொடாபோன் ஐடியா 55.2 புள்ளிகளைப் பெற்று இருக்கிறதாம்.
3. வாய்ஸ் ஆப் அனுபவம் (Voice App Experience)
வாய்ஸ் ஆப் அனுபவத்தில், சுனில் மித்தல் நிர்வகிக்கும் பார்தி ஏர்டெல் கம்பெனி, 100-க்கு 75.5 புள்ளிகளைப் பெற்று, முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. வொடாபோன் ஐடியா கம்பெனி 74.4 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், மத்திய அரசின் பி எஸ் என் எல் கம்பெனி கடைசி இடத்திலும் இருக்கிறதாம்.
4. பதிவிரக்க வேக அனுபவம் (Download Speed Experience)
இந்த பிரிவில், கடந்த ஆறு அறிக்கைகளில், பார்தி ஏர்டெல் தான் முதலிடம் பிடித்து வருகிறது. அதே போல இந்த முறையும் 10.4 எம் பி பி எஸ் வேகத்துடன் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது ஏர்டெல். இரண்டாவது இடத்தை வொடாபோன் ஐடியா கம்பெனி பிடித்து இருக்கிறதாம். அப்படி என்றால் ஜியோ எதில் தான் முதலிடம் பிடித்து இருக்கிறது?
4ஜி சேவை கிடைப்பது மற்றும் 4ஜி கவரேஜ் அனுபவம்
முகேஷ் அம்பானி நிர்வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, 4ஜி சேவை கிடைப்பது (4G Availability) மற்றும் 4ஜி கவரேஜ் (4G Coverage) இந்த இரண்டு விஷயத்திலும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. ஏர்டெல் கம்பெனி இந்த பிரிவில் முன்னேற்றம் காட்டி இருக்கிறது என ஓபன் சிக்னல் அறிக்கை சொல்கிறதாம்.
வொடாபோன் ஐடியாவும் ஒரு பிரிவில் முதலிடம்
அப்லோட் சேவை வேக அனுபவத்தில் (Upload Speed Experience) வொடாபோன் ஐடியா முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த ஒரே ஒரு பிரிவில் தான் வொடாபோன் ஐடியா (விஐ) கம்பெனி முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இணையத்தின் வேகமும் சேவையும் வளரட்டும். பொருளாதாரம் பெருகட்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications