டெல்லி: இந்திய டெலிகாம் துறையில், ரிலையன்ஸ் ஜியோவின் வரவுக்குப் பிறகு, ஒட்டு மொத்த இந்திய டெலிகாம் துறையே பயங்கரமாக மாற்றம் கண்டன.
ஒரு கட்டத்தில் ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள், மூன்று மாத காலத்துக்குள் முறையே 23,000 கோடி மற்றும் 50,000 கோடி நஷ்டம் என கண்ணீர் வடித்தார்கள்.
சரி இதுவரை, வாடிக்கையாளர்களைப் பிடிக்க போராடியது போதும், இனியாவது வியாபாரம் பார்த்து சம்பாதிப்போம் என, எல்லா டெலிகாம் நிறுவனமும் ஒற்றுமையாக விலை ஏற்றத் தொடங்கினார்கள். இந்த விலை ஏற்றம், தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களையும் பாதித்து இருக்கிறது.
விலை ஏற்றம்
ஏர்டெல் நிறுவனம், நேற்று டிசம்பர் 29, 2019, ஞாயிற்றுக் கிழமை, தன் ரிசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்களை அதிகரித்து இருக்கிறார்கள். குறிப்பாக, குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் தான் அதிகம் விலை ஏற்றம் கண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது.
முன்பு
ஏழை எளிய மக்கள், ஒவ்வொர் ரூபாயையும் எண்ணி செலவழிக்கும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களின் விலையையே அதிகரித்து இருக்கிறார்கள். 35 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த எண்ட்ரி லெவல் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள், இப்போது 49 ரூபாய்க்கு வாங்க வேண்டி இருக்கிறதாம்.
வேலிடிட்டி பேக்
அதே போல ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதாமாதம் விலை கொடுத்து வாங்க வேண்டிய வேலிடிட்டி பேக்குகளின் விலையையும் 35 ரூபாயில் இருந்து 45 ரூபாய்க்கு அதிகரித்து இருக்கிறார்கள். இது அடிப்படை ரீசார்ஜ் மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் செய்ய வேண்டிய ரீசார்ஜ் என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பேட்டி
இந்திய டெலிகாம் நிறுவனங்களின், (ARPU - Average Revenue Per User) ஒரு பயனரிடம் இருந்து வரும் வருவாய், 300 ரூபாய் அல்லது நான்கு அமெரிக்க டாலரைத் தொட வேண்டும், அப்போது தான் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் நிதி நிலை மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார்.
இந்தியா தான் சீப்
அப்படியே ஒரு பயனரிடம் இருந்து வரும் வருவாய் (ARPU), மாதம் 300 ரூபாயைத் தொட்டாலும், அப்போதும், உலகிலேயே, இந்தியா தான் மலிவு விலையில் டெலிகாம் சேவைகளை வழங்கும் நாடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுச் சொல்லி, நம் வயிற்றில் ஒரு கிலோ புளியைக் கரைத்து இருக்கிறார்.
அதென்ன ARPU
ஒரு டெலிகாம் நிறுவனத்துக்கு ஒரு மாதத்தில் வரும் மொத்த வருவாயை, மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு கழித்தால் கிடைப்பது தான் ARPU. உதாரணம் ஏர்டெல்லுக்கு கடந்த நவம்பரில் 100 ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. அவர்களின் மொத்த வாடிக்கையாளர்கள் 25 பேர் என்றால், 100 / 25 = 4. ஆக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 4 ரூபாய் வந்திருக்கிறது என்று பொருள்.
இப்போதைய நிலை
கடந்த செப்டம்பர் 2019 காலாண்டு நிலவரப்படி, ஏர்டெல் நிறுவனத்தின் (ARPU) ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வரும் வருவாய் 128 ரூபாயாக இருக்கிறது. அதே செப்டம்பர் காலாண்டில் ஜியோவின் (ARPU) 120 ரூபாயாக இருக்கிறது. ஜூன் 2019 காலாண்டில் வொடாபோன் ஐடியாவின் (ARPU) 107 ரூபாயாக இருக்கிறது. இதைத் தான் 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனச் சொல்கிறார் ஏர்டெல் தலைவர்.
கணக்கு
மேலும் பேசிய சுனில் மிட்டல், இந்தியாவில் குறைந்த அளவுக்கு டெலிகாம் சேவையைப் பயன்படுத்துபவர்கள் மாதம் 100 ரூபாயும், அதிகம் டெலிகாம் சேவையைப் பயன்படுத்துபவர்கள் 450 - 500 ரூபாய் செலவழிக்கிறார்கள். உலக அளவில் ஒப்பிடும் போது, இந்திய வாடிக்கையாளர்கள், கொடுக்கும் காசை விட 2 - 3 மடங்கு கூடுதல் டேட்டாவை பயன்படுத்துவதாகச் சொல்கிறார். இதிலும் சுனில் மித்தலின் வருத்தத்தை உணர முடிகிறது.
நம்ம கணக்கு
மேலே சொன்னது போல, இந்தியாவில் எந்த ஒரு டெலிகாம் நிறுவனத்தின் ஏ ஆர் பி யூ-வும் 150 ரூபாயைக் கூடத் தொடவில்லை. இப்போது ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் சொல்வது போல, ஏ ஆர் பி யூவை 300 ரூபாயைத் தொட வேண்டும் என்றால் காலப் போக்கில், இரண்டு மடங்கு விலை ஏற்றினால் தானே அதைப் பற்றி யோசிக்க முடியும். ஆக விலை ஏற்றம் எந்த நேரத்திலும் வரும் என பயந்து கொண்டிருந்தோம். இதோ வந்துவிட்டது. இனி மெல்ல எல்லா திட்டங்களும் முன்பு பயன்படுத்தியதை விட இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு மெல்ல வந்துவிடும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications