நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் லிமிடெட் கடந்த திங்கள்கிழமை அன்று அதன் டிஜிட்டல் பிரிவான ஏர்டெல் பைனான்ஸின் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிக்சட் டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 9.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிலும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு போட்டி வட்டி விகிதங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஏர்டெல் பைனான்ஸ் பிக்சட் டெபாசிட்களை வழங்க களமிறங்கியுள்ளது.
எப்படி டெபாசிட் செய்வது?: இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குவதற்காக ஏர்டெல் பைனான்ஸ் முக்கிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC-கள்) மற்றும் சிறு நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. "Airtel Thanks" அப்ளிகேஷன் மூலம் இந்த பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம். தங்கள் முதலீடுகளை தடையின்றி பாதுகாக்கவும் நிர்வாகிக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் திட்டமாகும்.

வழங்கப்படும் சேவைகள்: ஏர்டெல் பைனான்ஸ் ஏற்கனவே தனிநபர் கடன்கள், ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகள், ஏர்டெல் பஜாஜ் பின்சர் இன்ஸ்டா இஎம்ஐ கார்டுகள், கோல்டு லோன் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இதில் கூடுதலாக தற்போது பிக்சட் டெபாசிட் சேவையும் இணைந்துள்ளது.
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பிளாட்ஃபார்மில், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதற்காக புதிய வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஃபிக்ஸட் டெபாசிட்களை நேரடியாக பதிவு செய்து நிர்வகிக்கலாம். இந்தச் சேவை தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது. இது விரைவில் iOS-இல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது முற்றிலும் டிஜிட்டல் செயல்முறையாகும், இதில் 3 எளிய ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி இதில் முதலீடு செய்யலாம்.
ஸ்டெப் 1: FD-ஐ ஒப்பிட்டுத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 2: விவரங்களைக் கொடுத்து KYC செயல்முறையை முடிக்கவும்.
ஸ்டெப் 3: ஏற்கனவே உள்ள வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தவும்.
ஏர்டெல் ஃபைனான்ஸ், உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஷிவாலிக் பேங்க், சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் NBFC-களுடன் இணைந்து ஏர்டெல் ஃபைனான்ஸ் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இது வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதத்தில் உறுதியான வருமானத்தை பெற உதவும்.
ஏன் ஏர்டெல் பைனான்ஸ் பிக்சட் டெபாசிட்களை வழங்குகிறது: தனது வணிகத்தை பன்முகப்படுத்தும் நோக்கில் தற்போது ஏர்டெல் நிறுவனம் பிக்சட் டெபாசிட்களை வழங்க உள்ளது. இதன் மூலம் புதிய முறையில் வருவாய் கிடைக்கும். அது மட்டும் இன்றி வாடிக்கையாளர் கூடுதல் சேவைகளை வழங்க முடியும். இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்திற்காக ஏர்டெல் பைனான்ஸ் பல ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications