இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் மலிவான கட்டண சேவையின் மூலம் சக போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகச் சரிவையும், வாடிக்கையாளர்கள் இழப்பையும் எதிர்கொண்டு வந்தது. இதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வருமானத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் இந்த வேளையில் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் இரு நிறுவனங்களும் இறங்கியுள்ளது.
இந்தக் கடுமையான போட்டி நிறைந்த சூழ்நிலையில் சேவையின் தரம் முக்கிய விவாத பொருளாக மக்கள் மத்தியில் மாறியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது ஏர்டெல்.
டிராய் அமைப்பு
இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பு வாடிக்கையாளர் குறித்து வெளியிட்ட செப்டம்பர் மாத தரவுகள் அடிப்படையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 14.6 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.
ஆனால் ஏர்டெல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.
பார்தி ஏர்டெல்
டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் மாதத்தில் பார்தி ஏர்டெல் சுமார் 37.7 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது. ஜியோ உடன் நடக்கும் இந்தக் கடுமையான வர்த்தகப் போட்டியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இது மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா
VI என ரீ பிராண்டிங் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா இதே செப்டம்பர் காலாண்டில் 46.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்திய வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி வரும் வோடபோன் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருவது சந்தையில் போட்டி தன்மையை அதிகளவில் குறைக்கிறது.
சிங்கப்பாதையில் ஏர்டெல்
டெலிகாம் சேவையில் ஜியோ உடனான போட்டியில் ஏர்டெல் வெற்றி பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா வர்த்தகம் சரிவு பாதையை நோக்கி செல்ல துவங்கியுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் இருமுனை போட்டியாக மட்டுமே இருக்கும்.
அப்போ யார் கெத்து..?
புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 404.12 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டு சுமார் 35.19% சந்தை வர்த்தகத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.
இதைத் தொடர்ந்து ஏர்டெல் 326.61 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 28.44 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது. வோடபோன் ஐடியா 295.49 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 25.73 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது.
மேலும் பிஎஸ்என்எல் 10.35%, எம்டிஎன்எல் 0.29% சந்தையைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications