இந்தியாவில் 5ஜி சேவை வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் 94000 கோடி ரூபாய் இதற்காக முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் முக்கியமான விஷயத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பார்தி எண்டர்பிரைசர்ஸ் சேர்மன் சுனில் மிட்டல், இந்தியாவுக்கு இன்னொரு வோடபோன் ஐடியா போன்ற நிகழ்வு வேண்டாம்.
டெலிகாம் துறையில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு லாபம் கிடைக்க வேண்டும் அதற்குக் கட்டாயம் டெலிகாம் சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மலிவு விலை
இந்தியாவில் மலிவு விலையில் இண்டர்நெட் சேவை என்பது மாறி உலக நாடுகளின் விலை நிலைக்கு இந்திய கட்டணமும் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் சுனில் மிட்டல்-ன் பேச்சு டெலிகாம் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் விலை சுமையைக் கொடுக்க உள்ளதும் தெரிய வந்துள்ளது.
சுனில் மிட்டல்
இந்தியாவுக்கு இன்னொரு வோடபோன் ஐடியா போன்ற நிகழ்வு வேண்டாம் என்று பார்தி எண்டர்பிரைசர்ஸ் சேர்மன் சுனில் மிட்டல் இந்த வருடத்திற்கு மத்தியில் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்தது மட்டும் அல்லாமல், இந்தக் கட்டணம் கட்டாயம் சாமானிய மக்களைப் பாதிக்காது என்றும் உறுதி அளித்துள்ளார்.
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி
இதோடு சமீபத்தில் ஏர்டெல் தனது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக பேடிஎம் பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. இதை மொத்தமாக மறுத்துள்ளார் சுனில் மிட்டல், மேலும் பேடிஎம் பங்குகளை வாங்குவது குறித்து எவ்விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல்
ஏர்டெல் தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, கிராமங்களுக்கு டெலிகாம் சேவையை விரிவாக்குவது மட்டும் அல்லாமல் சேவை தரத்தையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக மொபைல் வோல்டு காங்கிரஸ் கூட்டத்தில் பார்தி எண்டர்பிரைசர்ஸ் சேர்மன் சுனில் மிட்டல் தெரிவித்தார்.
3வது பெரிய நிறுவனம் யார்
இந்தியாவில் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கிறது பார்தி ஏர்டெல். இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் குறைந்தது 3 டெலிகாம் நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முக்கியமான கேள்வி இந்த 3வது நிறுவனம் பிஎஸ்என்எல்-ஆ அல்லது வோடபோன் ஐடியா-வா என்பது தான்.
வோடபோன் ஐடியா
சமீபத்தில் வோடபோன் ஐடியா மத்திய அரசு செலுத்த வேண்டிய AGR நிலுவை தொகையில் பெரும் பகுதிக்கு இணையாக நிறுவன பங்குகளைக் கொடுத்து தனது கடன் சுமையைக் குறைத்துள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் நிலுவை தொகைக்கு மத்திய அரசு இந்நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளைப் பெற்று ஒற்றைப் பெரிய பங்குதாரராக உயர்ந்துள்ளது.
BSNL-க்கு வாய்ப்பு
இந்தப் பங்கு கைமாற்றத்திற்குப் பின்பு வோடபோன் ஐடியாவின் ப்ரோமோட்டர்களான இங்கிலாந்தின் வோடபோன் குழுமம் 31.8 சதவீத பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 18.3% பங்குகளை மட்டுமே வைத்துள்ளது. இது நிறுவனம் திவாலாகக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனமாக BSNL உயர வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications