தற்போது ஒரு குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்வதற்காக கணிசமான தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது. பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துவதால் டேட்டா பேக்குகள் போட வேண்டிய சூழல் உண்டாகிறது.
சந்தையில் தற்போது இருக்கக்கூடிய ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கக்கூடிய சிறந்த பிளான்கள் குறித்து இந்த கட்டுரையின் விரிவாக பார்க்கலாம்.

ஜியோ: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஓராண்டுக்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 4,498 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலம் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை நாம் பயன்படுத்த முடியும். மொத்தமாக ஓராண்டுக்கு 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.இந்த 4,498 ரூபாய் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி +ஹாட்ஸ்டார், சோனி எல்ஐவி, ஸீ5, டிஸ்கவரி ப்ளஸ் மற்றும் ஜியோ சினிமா பிரிமியம் ஆகிய தளங்களின் சந்தாவையும் இலவசமாக பெற முடியும்.
ஏர்டெல்: இந்நிறுவனம் வழங்க கூடிய ஓராண்டு திட்டம் இது. 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வீதம் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக நாம் 2,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி மற்றும் 5ஜி நெட்வொர்க் சேவைகள் இதன் மூலம் கிடைக்கும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை இந்த ஓராண்டு காலத்திற்கும் நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வோடபோன்: வோடபோன் ஐடியா வழங்கக்கூடிய ஆண்டு திட்டம். அதாவது 3,199 ரூபாய்க்கு வோடபோன் வழங்கக்கூடிய இந்த ப்ரிபெய்டு திட்டத்தின் மூலம் 365 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இது மட்டும் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை இலவசமாக நாம் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் 365 நாட்களுக்கும் இலவசமாக அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை பெற முடியும். ஆனால் இது செல்போனில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது.
ஜியோ : ஜியோ வழங்கக்கூடிய மூன்று மாத திட்டம் இது. 1,198 ரூபாய்க்கு ஜியோ வழங்கக்கூடிய இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் என்பது 84 நாட்கள் .1,198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது மட்டும் இன்றி 5ஜி இன்டர்நெட் சேவை கிடைக்கும். அதேபோல அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா பிரீமியம் போன்ற சேவைகளையும் நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏர்டெல்: ஏர்டெல் நிறுவனம் வழங்கக்கூடிய மூன்று மாத திட்டம் இது. 869 ரூபாய்க்கு நாம் ரீசார்ஜ் செய்து கொண்டால் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வீதம் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
வோடபோன்: இந்நிறுவனம் வழங்கக்கூடிய மூன்று மாத காலத்திட்டம் இது. 839 ரூபாய்க்கு ப்ரீபெய்டு பிளானில் ரீசார்ஜ் செய்து கொண்டால் நாம் மூன்று மாத காலத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் பெற்றுக்கொள்ளலாம். இரவு நேரங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவது இலவசம் இத்துடன் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் சந்தாவை நாம் இலவசமாக பயன்படுத்தலாம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications