இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் அதிகரித்து வரும் ஸ்பாம் கால் மற்றும் மெசேஜ்-களுக்கு எதிராக போராட ஒன்றிணையத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பார்தி ஏர்டெல் எல்லோருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றுகூடினாலே கட்டணத்தை உயர்த்துவதற்காகத் தான் இருக்கும், ஆனால் இம்முறை சற்று மாறுபட்டது.
பார்தி ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல், கமர்சியல் கால்களுக்கு பயன்படுத்தப்படும் நிறுவனங்களின் டெலிகாம் இணைப்புகள் குறித்த தரவைப் பகிர்வதற்கான கூட்டு முயற்சியை எடுக்க முன்மொழிந்துள்ளார், இதன் மூலம் நிறுவனங்களின் இணைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்துத் தடுக்க முடியும் என சக போட்டி நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஐடியா, மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மற்றும் டாடா டெலீசர்வீசஸ் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பார்தி ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல் எழுதிய கடிதத்தில், கமர்சியல் கால்களுக்கு பயன்படுத்தப்படும் நிறுவனங்களின் இணைப்புகள் குறித்த தரவை மாதந்தோறும் முறையாக வகைப்படுத்தப்பட்ட வடிவத்தில் அனைவரும் பொதுவாகப் பகிர்ந்தால், ஸ்பாம் நடவடிக்கைகளை எளிதாக அடையாளம் கண்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பாம் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், ஏர்டெல் இந்த திட்டத்தை சக டெலிகாம் நிறுவனங்களிடம் முன்வைத்துள்ளார்.
ஏர்டெல்லின் இந்த திட்டத்திற்கு இன்னும் பிற டெலிகாம் நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை. இந்தியாவில் ஸ்பாம் பிரச்சனை அபாயகரமான அளவிற்கு அதிகரித்துள்ளதால் இதன் மீதான நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்கு மத்தியிலான போட்டி காரணமாக, மிகவும் முக்கியமான வாடிக்கையாளர்கள் தரவைப் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆனால் ஸ்பாம் பிரச்சனை தற்போது தலைக்கு மேல் சென்றுள்ளது மட்டும் அல்லாமல் பல மோசடிகளுக்கு இது வழிவகுக்கிறது.
இந்தியாவில் தினமும் 1.5-1.7 பில்லியன் பிஸ்னஸ் மெசேஜ் அனுப்பப்படுகின்றன, இது மாதந்தோறும் கணக்கிட்டால் சுமார் 55 பில்லியன் எண்ணிக்கையில் உள்ளது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதேபோல் 10 பேரில் ஆறு பேர் தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பாம் கால்களைப் பெறுவதாகக் கூறினர், நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த அழைப்புகள் இதில் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.
கூடுதலாக, 76% வாடிக்கையாளர்கள் தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பாம் மெசேஜ்களை பெறுவதாக இந்தியாவில் செய்யப்பட்ட கள ஆய்வின் தரவுகள் காட்டியது.
மத்திய அரசும் - TRAI அமைப்பும் ஸ்பாம் கால் மற்றும் மெசேஜ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 350,000க்கும் மேற்பட்ட எண்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன, 50 நிறுவனங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications